கோவையில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு சிறப்பு தரிசனம்!!!!
10/21/2024
0
ஒயிலாட்ட குழுவினருடன் இணைந்து ஒயிலாட்டம் ஆடி களைஞர்களை பெருமை படுத்தினார் கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்மேடு, கொட்டைகாடு பகுதியில் அமைந்துள்ள ஆயிரம் வருட பழமை வாய்ந்த அருள்மிகு முத்துவாளியம்மன் உடனமர், அருள்மிகு முட்டத்து நாகேசுவரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் விழா இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலையை செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு சிறப்பு தரிசனம் மேற்கொண்டதுடன், கோபுர கலசங்களையும் தரிசனம் செய்து வழிபாட்டார். இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள் அவருக்கு வரவேற்பளித்து சிறப்பளித்தனர். மேலும் இராகு,கேது பரிகாரஸ்தலமாகவும் இத்தலம் காலம், காலமாக போற்றப்பட்டு வருவதுகுறிப்பிடத்தக்கது.அதைதொடர்ந்து பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க கோவில் வளாகத்தில் நடைபெற்ற ஒயிலாட்ட கலைஞர்களுடன் இணைந்து ஒயிலாட்டமாடி, பக்தர்களை மகிழ்வித்ததுடன், ஒயிலாட்டகுழு கலைஞர்களையும் பெருமை படுத்த்தி பாராட்டினார்.
