வேலூர் மாநகராட்சியில் 20 டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்!!!!
11/02/2024
0
வேலூர் மாநகராட்சியில் வழக்கமான நாட்களில் ஒரு நாளைக்கு சுமார் 210 டன் குப்பைகள் சேரும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தின் காரணமாக சாலைகள் மற்றும் சிறிய தெருக்களில் பட்டாசு குப்பைகள் குவிந்து காணப்பட்டன. இந்த குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றும் பணியில் 900 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப் பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கூடுதலாக ஒரே நாளில் 20 டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. அதாவது 230 டன் குப்பைகளை வேலூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை வேலூர் மாநகராட்சி சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார்.
