சென்னை:தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தலைமையில் செயற்குழு கூட்டம்!!!
11/03/2024
0
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலும் பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களின் முன்னிலையிலும் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டமானது நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கட்சிகளை மேம்படுத்தும் ஆலோசனை26தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கொள்கைகளையும், கொள்கை தலைவர்களையும் தமிழக வெற்றி கழகமானது நன்கு உணர்ந்து அதன் வழி நடக்கும் எனவும் கொள்கை திருவிழா மாநாட்டை மாபெரும் வெற்றி பெற வைத்த கழக நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும்,மதசார்பாற்ற சமூக நீதி கொள்கைகள் பற்றிய விளக்க தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஜனநாயககொள்கை தீர்மானம், பெண்கள் பாதுகாப்பு கொள்கை தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.தொடர்ந்து சமூக நீதி கொள்கை தீர்மானம் மற்றும் மாநில தன்னாட்சி உரிமை கொள்கை தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டது.விவசாய நிலங்கள் பாதுகாப்பு கொள்கை பற்றியும் விவாதிக்கப்பட்டது.கோவை மெட்ரோ ரயில் திட்ட பணிகளை விரைந்து தொடங்க தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.ஈழத்தமிழர்கள் மற்றும் மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் உரிமையும் விவாதிக்கப்பட்டது.மொழிக்கொள்கை தீர்மானம் மற்றும் சட்டம் ஒழுங்கு சார்ந்த தீர்மானமும் எடுத்துரைக்கப்பட்டது.மின்சாரக்கட்டணத்தை மாற்றியமைக்கவும், மதுக்கடைகளை மூடுவது தொடர்பாகவும்விவாதிக்கப்பட்டது.சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பெருமை சேர்க்கவும்,காயிதே மில்லத் பெயரில் அரசு விருது வழங்குவது பற்றியும் இதுபோன்று 26தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மட்டுமின்றி அதை தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
