கிருஷ்ணகிரி: மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், டிசம்பர் - 2024 முதல்வாரத்தில் வருகை!!
11/23/2024
0
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், டிசம்பர் - 2024 முதல் வாரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பெ.தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.அ.சாதனைக்குறள், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.எச்.எஸ்.ஸ்ரீகாந்த் இ.ஆ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டஇயக்குநர்திரு.பி.பெரியசாமி,மாவட்டவனஅலுவலர்திருமதி.கார்த்திகேயணி இ.வ.ப., மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் திருமதி.பி.புஷ்பா, ஓசூர் சார் ஆட்சியர் திருமதி.பிரியங்கா இ.ஆ.ப மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உள்ளனர்.
