கோவை: செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.பேட்டி!!!

sen reporter
0

தி.மு.க அரசு என்றாலே சட்ட ஒழுங்கு சரி இருக்காது : ரவுடிகள் ஆட்சி தான் நடக்கும் மேலும் தி.மு.க எம்.பி கள் பேசுவது எல்லாமே பொய் - பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கோவை, சித்தாபுதூர் உள்ள பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில் மகாராஷ்டிரா தேர்தலில் வெற்றியை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் பா.ஜ.க வினர் கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ

மகாராஷ்டிராவில் ஏழைகள், பெண்கள், விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் வழங்கியதால் மீண்டும் ஆட்சி அமைத்ததாக தெரிவித்தார். பெண்கள் இடையே மிகப்பெரிய மாற்றம் தெரிகிறது. அதனால் மிக பிரம்மண்டமாக வெற்றி பெற்று உள்ளதாக தெரிவித்தார்.ஜார்கண்ட் மாநில முதல்வர் சிறைக்குச் சென்று ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் அந்த ஊர் மக்கள் அவரை வெற்றி பெற செய்து உள்ளனர்.மகாராஷ்டிராவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. நகர்ப்புறம் மட்டுமல்லாமல் கிராமப்புற பகுதிகளிலும் அதிக அளவில் வளர்ச்சி காரணமாக மகாராஷ்டிராவில் வெற்றி பெற்றதாக தெரிவித்தார்.

காங்கிரஸ் வெற்றி பெறும் போதெல்லாம் ஈ.வி.எம் மிஷின் பற்றி பேசுவது இல்லை ஆனால் தோல்வி அடைந்தது பிறகு ஈ.வி.எம் மெஷின் பற்றி பேசுகிறார்கள்.வயநாடு மக்கள் குடும்ப கட்சிக்கு இன்னொரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து இருப்பதாக விமர்சனம் செய்து உள்ளார்.மாநில அரசு விவசாய நிலத்தை எடுத்து கொடுக்கும் போது கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் ஆனால் மாநில அரசு அதனை நடத்தவில்லை மத்திய அரசு நேரடியாக நிலத்தை கையகப்படுத்த முடியாது.அதேபோல் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை தி.மு.க அரசு வந்து கொண்டு வந்தது போல் செயல்படுத்துவதாக குற்றம் சாட்டினார். தேர்தல் நேரத்தில் தி.மு.க கட்சி பொய் பிரச்சாரம் செய்து வருவதாக விமர்சனம் செய்தார்.தமிழ்நாட்டில் மட்டும் இல்லை பல்வேறு மாநிலங்களில் மகளிர் உரிமை தொகையை கொடுக்கப்பட்டு வருகிறது. பெண்கள் உரிமைத் தொகை 2 ஆயிரம் ரூபாய் காட்டி, 20,000 ரூபாய் தி.மு.க அரசு கொள்ளை அடித்து வருவதாக தெரிவித்தார்.தி.மு.க அரசு என்றாலே சட்ட ஒழுங்கு சரி இருக்காது, ரவுடிகள் ஆட்சி தான் நடக்கும் மக்கள் அனைவரும் நம்பி வருவதாக கூறுகிறார். தி.மு.க எம்.பி கள் பேசுவது எல்லாமே பொய் என்றும் மாநிலத்தின் முதல்வர் எம்.பி களுக்கு பொய் பேசக் கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top