தற்போது சதுரங்க போட்டிகள் குறித்தான விழிப்புணர்வு அதிகளவில் இருப்பதாகவும் இதனால் அதிகமான சதுரங்க போட்டியாளர்கள் இது போன்ற போட்டிகளில் கலந்துகொள்வதாகவும் தெரிவித்தனர். இப்போட்டிகள் தொடர்பாக பேசிய ரோட்டரி கிளப் ஆப் கோவை அப் டவுன் நிர்வாகி கூறும் போது ரோட்டரி சங்கம் கடந்த 28 வருடங்களாக இந்த சங்கம் செயல்பட்டு வருவதாகவும், மாரத்தான், வாலிபால், போன்ற போட்டிகள் நடத்தபட்டதாகவும் இந்த முறை மாநில அளவிலான சதுரங்க போட்டியை நடத்தியிருப்பதாக தெரிவித்தார்.
கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியில் ஆர்வமுடன் கலந்துகொண்ட சிறுவர் சிறுமியர்!!!
11/11/2024
0
தமிழ்நாடு சதுரங்க சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோவை அப் டவுன் சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் கோவை, மணியகாரன்பாளையம் பகுதியில் நடைபெற்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என பொதுப்பிரிவு முறையில் நடத்தபட்டு வருகின்ற இப்போட்டியில் சுமார் 600 மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆர்வமுடன் தங்களது திறனை வெளிப்படுத்தினர். 9,12,16 வயது மற்றும் பொதுப்பிரிவு என நான்கு பிரிவுகளில் இந்த போட்டிகள் நடத்தப்படுவதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். மேலும் வெற்றி பெரும் வீரர்களுக்கு மிதி வண்டி, கோப்பைகள், சான்றிதழ்கள் என மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கபடுவதாக தெரிவித்தனர். இதில் குறிப்பாக மாற்று திறனாளிகள் கலந்துகொண்டு விளையாடியது அவர்களை மேலும் ஊக்கபடுத்தும் எனவும் தெரிவித்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மோதும் இப்போட்டிகளில் பெரியவர்களை காட்டிலும் சிறுவர், சிறுமியர்கள் வெற்றி பெற முனைப்பு காட்டினர்.

