இக்கூட்டத்திற்கான ஏற்பாட்டு பணிகளை அதிமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜுனன் பார்த்துக் கொண்டார். இந்த நிலையில் இக்கூட்டத்தில் செய்தி சேகரிக்க செய்தியாளர்களுக்கு அனுமதி இல்லை என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு சில மாவட்டங்களில் நடைபெற்ற கூட்டத்தின் பொழுது ஏற்பட்ட சலசலப்புகள், உட்கட்சி சண்டைகள் ஊடகத்தில் வெளியானதால் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
கோவை அதிமுக கள ஆய்வுக்குழு ஆலோசனை கூட்டம்செய்தியாளர்களுக்கு அனுமதி இல்லை!!!
November 28, 2024
0
அதிமுக சார்பில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் கள ஆய்வுக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக கோவை மாநகர் மாவட்டம் சார்பில் சுங்கம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கள ஆய்வு குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி வேலுமணி தலைமைவகித்தார்.