பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் பிரியாணி வழங்கிய ஆட்டோ சங்கம் கிளை திறப்பு விழா!!
11/24/2024
0
கோவை மாவட்ட மாநகர திராவிட ஆட்டோ ஓட்டுனர் முன்னேற்ற சங்கத்தின் எல்.பி.எப் பொள்ளாச்சி நகர பகுதியில் பொள்ளாச்சி நகர மற்றும் தாலுக்காஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டுநகரசெயலாளர்நவநீதகிருஷ்ணன் தலைமையில் திருவள்ளுவர் திடலில் திமுக கட்சிகொடிஏற்றிபொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய யும் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு நகர செயலாளர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் இதில் கோவை மாவட்ட திராவிட ஆட்டோ ஓட்டுநர்கள் முன்னேற்ற சங்கம் பொதுச் செயலாளர் வணங்காமுடி,நகரத் துணைச் செயலாளர் தர்மராஜ், பொள்ளாச்சி தாலுகா தலைவர் கே செந்தில்குமார் செயலாளர் குட்டப்பன்,துணைத் தலைவர்கள் சிவக்குமார் பஞ்சலிங்கம் கருப்புசாமி,செயலாளர் செந்தில்குமார்,துணைச் செயலாளர் செந்தில்குமார் பொருளாளர் முத்துக்குமார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கோட்டூர் பகுதியில் ஆட்டோ ஓட்டும் பெண் ஓட்டுனர்களுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் திமுக தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை அடங்கிய புத்தகத்தை நகரச் செயலாளர் வழங்கினார்.
