முன்னதாக இந்நிகழ்வில் தலைமை உரையாற்றிய அமைச்சர், 17 ஆண்டுகளாக ஒரு விழா சிறப்பாக நடைபெறுகிறது என்றால் அது கோவை விழா தான் எனவும் சில விழாக்கள் துவங்கி பாதியிலேயே கைவிடப்பட்டு விடும் என குறிப்பிட்டார்.
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என கூறிய அவர் கோவை மாவட்டம் தொழில்துறையில் வந்தவர்களை வாழ வைத்துள்ளது தொழில் தேடி வந்தவர்களையும் வாழ வைத்துள்ளதாக கூறினார். அண்மையில் கோவைக்கு வந்த முதலமைச்சர் 200 கோடி ரூபாயை சாலை சீரமைப்பிற்காக வழங்கி உள்ளதாகவும் விரைவில் கோவைக்கு கூடுதல் பெருமையை சேர்க்கும் வகையில் ஏழு மாடி கட்டிடமாக பெரியார் நூலாகவும் அமைய உள்ளது என தெரிவித்தார். மேலும் கோவைக்கு ஏராளமான திட்டங்களை முதல்வர் அடைத்துள்ளார் எனவும் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் ஹாக்கி மைதானத்திற்காக துணை முதல்வர் நிதி ஒதுக்கியுள்ளார் எனவும் கூடிய விரைவில் கோவையில் உலக தரம் வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியம் வரவுள்ளதாக தெரிவித்தார். மேலும் கோவையின் வளர்ச்சி என்பது தமிழகத்தின் வளர்ச்சியாக இருப்பதாகவும் மருத்துவத்தின் தலைநகராக கோவை திகழ்ந்து கொண்டிருப்பதாகவும் கூறிய அமைச்சர் இன்னும் என்னென்ன தேவைகள் இருக்கிறதோ அதை அனைத்தையும் இந்த அரசு செய்யும்எனதெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர், மேயர், துணை மேயர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

