திண்டுக்கல்: ரெட்டியார் சத்திரத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்!!!
11/05/2024
0
திண்டுக்கல்மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் ரெட்டியார்சத்திரம் தெற்கு வடக்கு மற்றும் ஸ்ரீராமபுரம்,கன்னிவாடி அகரம், தாடிக்கொம்பு, பேரூர் கழகம் மற்றும் அணைப்பட்டி ஊராட்சி வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம் தெற்கு ஒன்றிய செயலாளரும் ரெட்டியார் சத்திரம் ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி முன்னிலையில், கிழக்குமாவட்டச் செயலாளரும், பழனிசட்டமன்றஉறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது, கூட்டத்தில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் காமாட்சி, ஆத்தூர் தொகுதி பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி துணைச்செயலாளர்நாகராஜன்திண்டுக்கல்ஒன்றியசெயலாளர் நெடுஞ்செழியன்பொதுக்குழு உறுப்பினர் மூர்த்தி, வடக்கு ஒன்றிய செயலாளர் மணி,ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ராஜேஸ்வரி தமிழ்செல்வன் மாவட்ட கவுன்சிலர் சுப்புலட்சுமி சண்முகவேல், ஸ்ரீராமபுரம் பேரூர் கழக செயலாளர் ராஜா, கன்னிவாடி பேரூர் கழக செயலாளர் இளங்கோவன், அகரம் பேரூர் கழகச் செயலாளர் ஜெயபால், தாடிக்கொம்பு பேரூர் கழகச்செயலாளர்ராமலிங்கசாமி, மாவட்ட இளைஞர்அணிதுணைச் அமைப்பாளர் ராஜேஷ் பெருமாள், முன்னாள் பேரூர் கழகச் செயலாளர் சண்முகம், முன்னாள் நிலவள வங்கி செயலாளர் சக்கரவர்த்தி, உள்ளிட்ட மாவட்ட பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்,படம் ரெட்டியார் சத்திரத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி செந்தில்குமார் பேசினார்.
