வேலூரில் மாடு மேய்த்தவர் மீது 2 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததால் திடீர் பதட்டம்!!!
December 04, 2024
0
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த ஓனாங்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் மதிய வேளையில் ஓனாங்குட்டை காப்புக்காட்டில் தனது நண்பருடன் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ வந்த 2 துப்பாக்கி குண்டுகள் அவரது வயிற்றிலும் இடது முழங்காலிலும் பாய்ந்தன. இதையடுத்து அவர் அலறி துடித்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு போதிய உபகரணங்கள் இல்லாததால் முதலுதவி சிகிச்சை மட்டும் அளித்து அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இவரை துப்பாக்கியால் சுட்டது யார்? என்பதுஇதுவரைதெரியவில்லைவனவிலங்குகளை வேட்டையாட துப்பாக்கியை பயன்படுத்திய போது துப்பாக்கி குண்டுகள் தவறி வந்து இவர் மீது பாய்ந்தனவா? என்பது குறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும்ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.