கோவை: லாரல் கல்வி குழுமங்களின் 30 வது ஆண்டு பேர்ல் ஜூபிளி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது!!!

sen reporter
0

கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ்.நகர் பகுதியில் லாரல் கல்வி குழுமங்களின் கீழ் லாரல் மெட்ரிக் மேல் நிலை பள்ளி மற்றும் பெங்கலன் பப்ளிக் பள்ளி ஆகிய இரு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் லாரல் கல்வி குழுமங்களின் நிறுவன தலைவர் மார்கரெட் அம்மையாரின் பிறந்த நாளில்  ஒவ்வொரு ஆண்டும் லாரல் கல்வி குழுமங்களின் ஆண்டு விழா நடைபெற்று வருகிறது.. தொடர்ச்சியாக முப்பதாவது பேர்ல் ஜீபிளி ஆண்டு விழா லாரல் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது..

லாரல் கல்வி குழுமங்களின் தாளாளர் ஃபிராங்க் டேவிட் தலைமையில் நடைபெற்ற விழாவில் இணை தாளாளர் அபிஷேக் பால் ஜாக்சன் மற்றும் கிறிஸ்ஸி அபிஷேக் பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக லவ் ஆஃப் ஜீசஸ் மினிஸ்ட்ரீஸ் அமைப்பின் துணை தலைவர் டேனியல் ஜவஹர் சாமுவேல்,மற்றும் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்..

விழாவில்சிலம்பம்,ஜூடோ, கராத்தே,ஸ்கேட்டிங் மற்றும் இசை போட்டிகளில் மாவட்ட,மாநில அளவுகளில் பல்வேறு வெற்றிகளை குவித்த லாரல் மற்றும் பெங்கலன் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு சிறப்பு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது..

தொடர்ந்து நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக மருத்துவம், பொறியியல்,தகவல் தொழில் நுட்பம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய பணிகளில் இருக்கும்  லாரல் கல்வி குழுமங்களில் பயின்ற முன்னால் மாணவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் லாரல் கல்வி குழுமங்களில் பயின்ற முன்னால் மாணவர்கள் 15 பேருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது..இதனை தொடர்ந்துமாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் வண்ண உடைகள் அணிந்த மாணவ,மாணவிகள் குழு மற்றும் தனி நடனம்,ஆடல்,பாடல்,நாடகம் போன்ற நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் தனித்திறமைகளை நிரூபித்தனர்.விழாவில் பெற்றோர்கள்,பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள், மாணவர்கள்,அலுவலக ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்...

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top