திருச்சி: தமிழக அரசு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆலோசனைக் கூட்டம் திருச்சி வடக்கு மாவட்டத்தின் சார்பாக நடைபெற்றது!!!
12/28/2024
0
தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் திருச்சி வடக்கு மாவட்டம் ஜனவரி மாதம் 24 1 2025 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் சலூன் கடைகள் அடைப்பு தமிழக அரசு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆலோசனைக் கூட்டம் திருச்சி வடக்கு மாவட்டத்தின் சார்பாக நடைபெற்றது கூட்டத்திற்கு தலைவர் சண்முகசுந்தரம் மாவட்ட செயலாளர் டாக்டர் சுரேஷ் மாவட்ட பொருளாளர் கலைமணி ஆகியோர் தலைமை தாங்கினார் வரவேற்புரை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மாரிமுத்து இக்கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர்கள் மாவட்ட துணைச் செயலாளர்கள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் மகளிர் அணி அமைப்பாளர் கலைவாணி ஆகியோர் கலந்து கொண்டனர் கூட்டத்தின் தீர்மானங்கள் தமிழ்நாடு முடி திருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கம் வருகின்ற ஜனவரி மாதம் 24 1 2025 அன்று வெள்ளிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் முடித்திருக்கும் தொழிலகம் முழு அடைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது தமிழக அரசு திருக்கோவிலில் பணியாற்றும் முடி இறக்கும் தொழிலாளர்கள் அனைவரும் அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது திருச்சி வடக்கு மாவட்டத்தின் சார்பாக ஆயிரம் நபர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதாக தீர்மானம் உறுதி செய்யப்பட்டது தீர்மானங்கள் முடி திருத்தும் தொழிலாளர் நல வாரியத்தின் தலைவராக மருத்துவ சமுதாயத்தைச் சார்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் , திருக்கோயிலில் பணிபுரியும் முடி இறக்கும் தொழிலாளர்களையும் தவில் நாதஸ்வர கலைஞர்களையும் அரசு ஊழியராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்ற தமிழக முதலமைச்சர் கேட்டுக்கொள்கின்றோம் மேலும் மருத்துவ சமுதாய மக்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் எங்கள் சமூகத்தை தீண்டாமை மற்றும் வன்கொடுமையில் இருந்து காப்பாற்ற பி சி ஆர் சட்ட பாதுகாப்பு கொடுக்க வேண்டும் தமிழக முதலமைச்சர் கேட்டு கொள்கின்றோம் சுதந்திரப் போராட்ட வீர தியாகி எஸ் எஸ் விஸ்வநாததாஸ் அவர்களின் தபால் தலை வெளியிட வேண்டும் என்று மாநில அரசையும் மத்திய அரசின் கேட்டுக்கொள்கின்றோம் தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தை காப்பாற்றுவதற்காக நூற்றாண்டுகள் முன்பாக தென்னிந்திய தழுவிய மருத்துவர் சங்கத்தை தோற்றுவித்தவர் மருத்துவ தந்தை எஸ் எஸ் ஆனந்தம் பண்டிதர் அவர்களின் பெயரை சித்த மருத்துவ கல்லூரிக்கு சூட்டி பெருமைப்படுத்த வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றோம் , முடிவில் மாநில மண்டல அமைப்பு செயலாளர் செந்தில்குமார் நன்றியுரையாற்றினார் கொள்கை வளர்ப்பு செயலாளர் மருதை வீரன்
