சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் , ஊராட்சி தலைவர்கள் அ. சோலையப்பன் , செ. கார்த்திகைச்சாமி பங்கேற்பு...
சிவகங்கை அரசனி முத்துப்பட்டி ஊராட்சி களத்தூர் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கலையரங்கம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 7.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு அரசனி முத்துப்பட்டி ஊராட்சி தலைவர் அ. சோலையப்பன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் திறந்து வைத்தார்...
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மேனாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலர் இராமசாமி, ஒன்றிய செயலாளர்கள் செல்லமணி, கருணாகரன்,சிவசிவ பொன்னாகுளம் ஊராட்சி தலைவர் செ. கார்த்திகைச்சாமி, கூட்டுறவு சங்க மேனாள் தலைவர் மா. பாபு, ஊராட்சி மேனாள் தலைவர் கீழக்குளம் அர்ச்சுனன், அதிமுக நிர்வாகிகள் இளங்கோவன், கிளைக்கழக செயலாளர் துக்கால் இராஜேந்திரன் மெடிக்கல் அழகுபாண்டி ஊராட்சி எழுத்தர் வீரவலசை மூர்த்தி, மக்கள் நலப்பணியாளர் சங்கர் கணேஷ் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கவந்து கொண்டனர்...
