இந்நிலையில் ஈரோடு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, கோவை வந்த மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவை இராமநாதபுரத்தில் உள்ள மறைந்த இரா.மோகன் இலத்திற்கு வந்து, இரா.மோகனின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து இரா.மோகன் அவர்களின் மனைவி சுகுணா, மகன் டிவேதிரா, மகள் கவிதா மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.தொடர்ந்து முதல்வர் பேட்டியின்போது சட்டமன்ற தேர்தலில் 200 க்கும் மேல் தாண்டுவோம். ஈரோடு கள ஆய்விற்கு பிறகு தெரிகின்றது.ஒரேடு நாடு ஒரே தேர்தல் ஜனநாயக படுகொலை.அம்பேத்கார் விவகாரம், அடுத்த கட்டம் தொடர்பான கேள்விக்கு, இந்தியா கூட்டணி தலைவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்.ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான கேள்விக்கு இந்தியா கூட்டணி எதிர்கொள்ளும் என்றார்.
ராகுல்காந்தி மீது போடப்பட்ட வழக்குசட்டப்படிசந்திப்பார். விஜய் அரசியலுக்கு வருவது எவ்வாறு பார்க்கின்றீர்கள் என்ற கேள்விக்கு பார்க்கலாம் என்றார்.
இந்த நிகழ்வில், அமைச்சர்கள் கேஎன்.நேரு, முத்துச்சாமி, வெள்ளக்கோவில் சாமிநாதன், மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக் Ex Mla, தொ.அ.ரவி, தளபதி முருகேசன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி பணிகள் குழு தலைவர் சாந்திமுருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் வேநா.உதயகுமார், முமச.முருகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
