இந்தியா முழுவதும் 100 விற்பனை நிலையங்களை கொண்டுள்ள காப்பி ரெடி நிறுவனம் கோவை காந்திபுரம் கிராஸ் கட் சாலையில் உள்ள போத்தீஸ் நிறுவனத்துடன் கைகோர்த்து புது கிளையை துவங்க்கியுள்ளது.
இதனை காப்பி ரெடி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கீர்த்தி, போத்தீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அசோக் மற்றும் துணை தலைவர் சக்தி நாராயணன், ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ் கீர்த்தி ,நறுமனத்துடன் புத்துணர்ச்சியை வழங்கும் காபியை விரும்பாத மக்களே இல்லை என்ற நிலை தமிழகத்தில் அதிக அளவில் உள்ளது.அவ்வாறான காபி ப்ரியர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையி்ல் மக்கள் அதிக அளவில் வரும் பகுதிகளில், காப்பி ரெடி நிறுவனம், காப்பி ரெடி ஆன் வீல்ஸ் எனும் கார்ட் மாடல் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்தியா முழுவதும் 100 கிளைகளை கொண்டுள்ள இந்நிறுவனம், மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்து, இந்தியா முழுவதும் 5000 கிளைகளை துவங்க உள்ளது.இதனால் ஆயிரகணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தர உள்ளதாக கூறினார்.
ஒவ்வோரு மாநிலத்திலும் ஒவ்வோரு சுவை, மற்றும் நறுமனத்துடன், கிடைக்கும் இந்த வகை காபிகளை தரமானதாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதால் இந்தியாவில் நெம்பர் ஒன் பில்டர் காபி என்ற பெறுமையை பெற்றுள்ளது என்றார்.மேலும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இக்கிளையில் பில்டர்காபியின் அளவு, மற்றும் தரத்தின் அடிப்படையில் வழங்கும் இயந்திரத்தின் மதிப்பு மட்டுமே சுமார் 2 லட்சம் என்று கூறியவர், இந்த இயந்திரம் காபியின் பில்டர், மற்றும் பாலின் அளவை சரி சமமாக வழங்குவதால் எத்தனை கோப்பைகள் சுவைத்தாலும் மீண்டும் மீண்டும் அதன் சுவை, மனம், மாறாமல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் போத்தீஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் ராஜசேகரன், காப்பி ரெடி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராம்குமார், மற்றும் விரிவாக்க இயக்குனர் மோகன சுந்தரம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்..
