இந்திய அளவில் பல்வேறு நவீன வசதிகளை கொண்ட மருத்துவமனையாக அப்பல்லோ மருத்துவமனை குழுமம் செயல்பட்டுவருகிறது.இந்நிலையில் பற்கள் தொடர்பான அனைத்து வகை சிகிச்சைகள் மற்றும் பற்களை அழகு படுத்தும் நவீன சிகிச்சைகளை வழங்கும் விதமாக அப்பல்லோ டென்டல் மையம் கோவை வடவள்ளியில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தனது சேவையை விரிவுபடுத்தும் விதமாக கோவை சரவணம்பட்டி பகுதியில் அப்பல்லோ டென்டல் மையம் தனது இரண்டாவது கிளையை துவங்கியுள்ளது..கோவை சரவணம்பட்டி துடியலூர் பிரதான சாலையில் துவங்கப்பட்டுள்ள இதற்கான துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சதீஷ் கலந்து கொண்டு புதிய மையத்தை திறந்து வைத்தார்..
புதிதாக துவங்கப்பட்டுள்ள அப்பல்லோ பல் சிகிச்சை மையத்தின் இயக்குனர் பிரசாந்த் மற்றும் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் கீர்த்தனா பிரசாந்த் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,பற்கள் தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளை கொண்டு இந்த மருத்துவமனை செயல்பட உள்ளதாகவும்,
இங்கு சிறு குழந்தைகள் துவங்கி வயதான முதியவர்கள் வரை அனைவருக்கும் பிரத்யேக தனி கவனம் செலுத்தி அனுபவம் வாய்ந்த மருத்துவ குழுவினரை கொண்டு சிகிச்சை அளிக்க இருப்பதாக தெரிவித்தனர்..
குறிப்பாக இங்கு பல் சிகிச்சை எடுப்பவர்கள் இந்தியாவில் உள்ள எந்த அப்பல்லோ மருத்துவமனைகளிலும் தொடர் சிகிச்சை எடுத்து கொள்ளலாம் என கூறினர்..தற்போது இளம் வயதினர் பற்கள் சீரற்ற வரிசையில் இருப்பதை சரி செய்து தங்களது முக அழகை மேலும் அழகு படுத்த நவீன தொழில் நுட்ப வசதிகளை கொண்டு சிகிச்சை வழங்கும் வசதிகள் இங்கு இருப்பதாக தெரிவித்தனர்..தற்போது திறப்பு விழா சலுகையாக இந்த மாத இறுதி வரை அனைத்து சிகிச்சைகளுக்கும் 10 சதவீத தள்ளுபடியும்,மேலும் சிறப்பு சிகிச்சைகளுக்கு அதிகபடியான சலுகைகளும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடதக்கது..