இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மேனாள் பிரதிநிதி ஊராட்சி மன்ற மேனாள் தலைவருமான கண்ணாரிருப்பு மு. ரவி, கிளைக்கழக செயலாளர்கள் ஒப்பந்ததாரர் பொன்னழகு என்ற ஏழுமலை, ஒப்பந்ததாரர் கீழக்குளம் நல்லசாமி, ஒன்றிய மாணவரணி மேனாள் அமைப்பாளர் முடிகண்டம் ஆனந்தக்குமார் சிவமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...
சிவகங்கை: மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் பிறந்தநாள் விழா!!!
12/30/2024
0
சிவகங்கை மாவட்டம் முழுவதும் சிவகங்கை மாவட்ட திமுகவினர் கோவில் மற்றும் முதியோர் இல்லங்களிலும் அன்னதானம் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடி வாழ்த்துகளை தெரிவித்தனர்.அரசனி முத்துப்பட்டியில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் மதிய அறுசுவை உணவு மற்றும் இனிப்புகள் வழங்கினர்.கிளைக்கழக செயலாளர் வழக்கறிஞர் பில்லூர் கார்த்தி தலைமையிலும் ஒன்றிய அவைத்தலைவர் கா. காளிதாஸ், ஒன்றிய மேனாள் பொருளாளர் சக்கந்தி காஜா முகைதீன் , மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளரும் கவுன்சிலருமான வண்டவாசி கா. கோவிந்தராஜன், துணைச்செயலாளர் வில்லிபட்டி பண்ணையார் இராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையிலும் இல்லத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர்களுக்கு அறுசுவை அசைவ உணவு, பழங்கள், பிஸ்கட் பாக்கெட் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது...
