மானாகுடி திமுக கிளைக்கழக செயலாளர் அய்யப்பன் இளைஞரணி வெல்டிங் செந்தில்குமார் ஆகியோரது ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வடமாடு மஞ்சு விரட்டு நிகழ்ச்சியில் சிவகங்கை தெற்கு ஒன்றியக்கழக செயலாளர் டாக்டர் ம. ஜெயராமன் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரசனி முத்துப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் சோலையப்பன், மாவட்ட திமுக பிரதிநிதி மனோகர் சாமிநாதன், மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ஒமேகா திலகவதி கண்ணன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சாமியார்பட்டி பிரவீன் , ஒன்றிய அயலக அணி அமைப்பாளர் சக்கந்தி தமிழ்ச்செல்வன் , இளைஞரணி அழகுசுந்தரம், வழக்கறிஞர் தினேஷ் , தொண்டரணி முத்துக்குமார் , ஒன்றியக்கழக நிர்வாகிகள் டாமின் குமார் , கல்குளம் பாலுச்சாமி, முணியாண்டி உள்ளிட்ட விழாக்கமிட்டியாளர்கள், இளைஞர்கள்கிராமப் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை அய்யப்பன் மற்றும் வெல்டிங் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்..
