பள்ளி துவங்கி ஒரு வருடத்தில் அந்த பகுதி பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த பள்ளி தற்போது மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக சிறந்த வளரும் மழலையர் பள்ளி (Best Upcoming pre School) எனும் விருது வாங்கி அசத்தியுள்ளனர்..
அதன் படி கோவை உப்பிலிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் விப்ஜியோர் பள்ளியில் வழங்கப்பட்டு வரும் (Radians Partnering for Growth)
ரேடியன்ஸ் பார்ட்னரிங் ஃபார் க்ரோத் பிரிவில் பெஸ்ட் அப் கமிங் மழலையர் பள்ளி எனும் விருது பால்ஸ் எஜுகேஷன் டிரஸ்ட் கீழ் இயங்கும் ஃபர்ஸ்ட் க்ரை இண்டெலிடாட்ஸ் ப்ரீ ஸ்கூலுக்கு வழங்கப்பட்டுள்ளது..
இந்நிலையில் இந்த விருதை ஃபர்ஸ்ட் க்ரை இண்டெலிடாட்ஸ் ப்ரீ ஸ்கூல் நிர்வாக அறங்காவலர் டாக்டர் கிறிஸ்டோபர் பால் மற்றும் முதல்வர் ஏஞ்சலின் கிறிஸ்டோபர் ஆகியோர் பெற்று கொண்டனர்.பள்ளி துவங்கி ஒரு வருடத்திற்குள் சிறந்த மழலையர் பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதை பலரும் பாராட்டுகளை தெரிவித்து வாழ்த்து கூறி வருகின்றனர்..