ஃபைட்டிங் , குவான், வெப்பன் என மூன்று பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் தமிழக அணி சார்பாக கோவையை சேர்ந்த கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமியை சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள்உட்படஏழுபேர்பங்குபெற்றனர்இந்நிலையில் கடுமையான சவால்களுக்கு இடையே திறமைகளை நிரூபித்த கோவை மாணவ,மாணவிகள் ஆறு தங்கம்,5 வெள்ளி ,7 வெண்கலம் என பதினெட்டு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்..இந்நிலையில் கோவை விமான நிலையம் திரும்பிய தலைமை பயிற்சியாளர் சதீஷ் மற்றும் வீரர்,வீராங்கனைகளுக்கு உற்சாகவரவேற்புஅளிக்கப்பட்டது.இதில் விமான நிலையம் வந்த பெற்றோர்கள் மற்றும் சக மாணவர்கள்பதக்கம்வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு பூங்கொத்து கொடுத்து,சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்..தேசிய அளவிலான கராத்தே போட்டியில் அரசு பள்ளியில் பயின்ற மாணவிகளும் பதக்கம் வென்று கோவைக்கு பெருமை சேர்த்துள்ளதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்…

