திண்டுக்கல்: காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள்புகுந்து வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தியதை அமைச்சர் ஐ பெரியசாமி பார்வையிட்டார்!!!

sen reporter
0

திண்டுக்கல் மாவட்டம்  ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் ஸ்ரீராமபுரம் அருகே உள்ள நீலமலைக்கோட்டை கிராம பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டி உள்ளது, இப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 500 ஏக்கருக்கும் அதிகமாக தென்னை, வாழை, எலுமிச்சை, பப்பாளி, சப்போட்டா, உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து மலைப்பகுதியில் இருந்து  பத்துக்கு மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் விவசாய நிலங்களுக்குள் கம்பி வேலிகள் சோலார் வேலிகளை உடைத்துக் கொண்டு  கூட்டமாக உள்ளே வந்து, இப்பகுதியில் உள்ள வாழை தென்னை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி விட்டு செல்கிறது. கடந்த ஒரு வார காலமாக ஜெயராமன் 5. ஏக்கர் விவசாய தோட்டத்தில் தென்ன மரத்தினை சேதப்படுத்தியது, மற்றும் சண்முகம், விவசாயதோட்டத்தில் 40 தென்னை மரங்களையும். 50 வாழை மரங்களையும் சேதப்படுத்தி உள்ளது, பழனியம்மாள் என்பவர் தோட்டத்தில் இரண்டு ஏக்கர் வெள்ளைச் சோலை பயிரை சேதப்படுத்தியது,மேலும் குப்புசாமி என்பவர் தோட்டத்தில் ஒரு ஏக்கர் மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தி உள்ளது  உள்ளிட்டோரின் தோட்டங்களுக்குள் புகுந்து சுமார் 450 லிருந்து 500க்கும்க்கும் மேற்பட்ட தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. விவசாயிகள் அனைவரும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவரிடம் கோரிக்கை வைத்தனர்,சோத்தல் நாயக்கன் கோம்பை அருகே உள்ள பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு  அமைச்சர் . ஜ.பெரியசாமி ஆறுதல் கூறினார்..   


கருகுமடை தோட்டம் சோத்தல் நாயக்கன் கோம்பை அருகில்  உள்ள சேதமடைந்த தோட்டங்களை பார்வையிட்டு  அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும் அமைச்சரிடம் எங்களுக்கு பாதுகாப்பு மற்றும் உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அமைச்சர் ஐ பெரியசாமி விவசாய நிலங்களுக்குள் யானைகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் கூறினார் இந்த நிகழ்வில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் சத்தியமூர்த்தி, அகரம் பேரூராட்சி தலைவர் நந்தகோபால், நெல்லை சுபாஷ், நீலமலைக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராதா தேவி சாமிநாதன், புதுச்சத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி,ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஏ ஆர் கே ரமேஷ்,பேரூராட்சி மன்ற கவுன்சிலர் பாலன், பொறியாளர் அணி முருகேசன், மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் படம் திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீராமபுரம் அருகே உள்ள நீல மலைக்கோட்டை சோத்தல் நாயக்கன் கோம்பை அருகே விவசாய நிலங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி பார்வையிட்டார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top