திருவூர் சிலம்பம் கிளப் மற்றும் திருநின்றவூர் நடராஜன் சிலம்பம் கிளப் சார்பில் மூன்றாம் ஆண்டு தமிழ் புத்தாண்டு பொங்கல் திருவிழா!!!
1/17/2025
0
திருவூர் சந்தை வளாகத்தில் பயிற்சியாளர்கள் சுந்தர் ( எ ) துரைராஜ , ராஜா , ஜெயா ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அலுவலர் வி.சேதுராஜன் , செவ்வாப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.ஜெயகிருஷ்ணன் , தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் , ஹண்டே மருத்துவமனை மேற்பார்வையாளர் வை.ஜோதி , தொழிலதிபர்கள் எட்வின், தாமோதரன் , உதயக்குமார் , கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றி சிலம்பம் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கோலப்போட்டி , மியுசிக்கல் சேர் , லைமன் ஸ்பூன், உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் கேடயத்தை பரிசாக வழங்கி சிறப்பித்தனர் இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்துக்கொண்டு சிறப்புத்தனர் முடிவில் து. லோகரட்சகி நன்றி கூரினார்
