தென்காசி:கடையநல்லூர் ஒன்றியம் சின்னதம்பிநாடாரூரில் சமுதாய நலக்கூடத்திற்கு அடிக்கல்!!!
1/29/2025
0
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ 30 லட்சம் மதிப்பீட்டில் கடையநல்லூர் ஒன்றியம் சின்னதம்பிநாடாரூரில் சமுதாய நலக்கூடம், வேலாயுத புரத்தில் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ரூ 13 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றிற்கு மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார், இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவர் வி பி மூர்த்தி மாவட்ட கழக துணை செயலாளர் பொய்கை சோ மாரியப்பன், மாவட்ட மகளிரணி செயலாளர் சத்யகலா, ஒன்றிய கழக செயலாளர் ஜெயகுமார், மாவட்ட இளைஞர் பாசறை துணை செயலாளர் ராஜேஷ் பாண்டியன், மாவட்ட கலை பிரிவு தலைவர் சந்திரகுமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் அசோக், சாம்பவர்வடகரை பேரூர் கழக துணை செயலாளர் கந்தசாமி, கிளை செயலாளர்கள் முருகன், குமார், அருமைகனி துரைபாண்டியன் செல்வம் மாணிக்கம் மற்றும் குமரேசன் துரைகனி மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
