கோவை: காட்பாடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு!!!!
1/10/2025
0
வேலூர் மாவட்டம், பழைய காட்பாடி பெருமாள் கோவில் வீதியில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடந்தது. இதைய டுத்து சர்வ அலங்காரத்துடன் ஸ்ரீ வரதராஜ பெருமாள் பரமபத வாசலை கடந்து பக்தர்களுக்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வரதராஜ பெருமாளை தரிசித்து அவரது அருளுக்கு பாத்திரமாகி ரங்கா ரங்கா என்றும், ஸ்ரீகோவிந்தா கோவிந்தா என்றும் உரத்த குரலில் வழிபாடு நடத்தி அவரது அருளுக்கு பாத்திரமாயினர். இந்த வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு சிறப்பு பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் பட்டாச்சாரியார் ஷண்முகம் விமரிசையாக செய்திருந்தார். கோயில் நிர்வாகம் சார்பில் இந்த பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது.
