திண்டுக்கல் :ஸ்ரீராமபுரத்தில் அமைச்சர் ஜ. பெரியசாமி பிறந்தநாளை முன்னிட்டு கழக கொடி ஏற்றி வைத்து இலவச கண் சிகிச்சை முகாம்!!!

sen reporter
0

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் பெருமிதம்.திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் ஸ்ரீராமபுரம் பேரூர் திமுக கழக சார்பில் அமைச்சர் ஜ.பெரியசாமி பிறந்தநாளில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் கழக கொடியேற்றும் விழா நடைபெற்றது. இந்த முகாமில் கண்புரை சர்க்கரை நோய், கண்ணீர் அழுத்த நோய் குழந்தைகளின் கண் நோய் கண்புரை நோயாளிகள் சிகிச்சை அளித்து கண்புரை ஆபரேஷன் செய்ய நோயாளிகள் மதுரைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். மேலும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமார் கழகக் கொடியேற்றி வைத்து அதன் பின்பு இலவச கண் பரிசோதனை முகாமை துவக்கி வைத்து பேசுவையில் ஸ்ரீராமபுரம் பேரூர் திமுக கழகத்தின் சார்பில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ .பெரியசாமி பிறந்தநாள் முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த முகாம் 2001 முதல் தொடர்ந்து அமைச்சர் பிறந்தநாளில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.   ஆத்தூர் தொகுதிக்கு மக்களுக்கு எண்ணற்ற ஏராளமான திட்டங்களை கொண்டு வந்து சேர்த்தவர் அமைச்சர் ஜ.பெரியசாமி குறிப்பாக கலைஞரின் கனவு இல்லம். மகளிர் உரிமைத்தொகை. மகளிர்காண இலவச பஸ் பயணம். என ஏராளமான திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம் என்றார். இதற்கு முன்னதாக கழகக் கொடி கருப்பி மடம். போலியம்மனூர். திருமலைராயபுரம். ஸ்ரீராமபுரம் ஆகிய ஐந்து இடங்களில் 73 அடி உயரமுள்ள கழக கொடி ஏற்றி வைத்தார்.

இவ்விழாவில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சத்தியமூர்த்தி. தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் ப.க. சிவ குருசாமி. வடக்கு திமுக ஒன்றிய செயலாளர் மணி. ஸ்ரீராமபுரம் பேரூர் கழகச் செயலாளர்  அ.ராஜா. கன்னிவாடி பேரூர் கழகச் செயலாளர் இளங்கோவன். பேரூராட்சி மன்ற தலைவர்  அ.சகிலா பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ப.முருகேசன் முன்னாள் பேரூர் கழகச் செயலாளர் சண்முகம்

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜேஷ் பெருமாள். முத்துக்குமார். மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மலைச்சாமி. ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஏ.ஆர்.கே ரமேஷ். பேரூர் கழகப் பொருளாளர் துரையன். மாவட்ட பிரதிநிதிகள் சாகுல் அமீது. இளங்கோ. குப்புசாமி. மாவட்ட வழக்கறிஞர் அணி செல்வவிநாயகம். பேரூர் துணைச் செயலாளர் பாலமுருகன். சின்ன கோம்பை பாசன தலைவர பரமசிவம். பெரிய கோம்பை பாசன தலைவர் பெரியசாமி. மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மாவட்ட மாநகர ஒன்றிய பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் வார்டு கிளைச் செயலாளர்கள் சார்பு அணியினர் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top