பெங்களூருவை தளமாகக் கொண்ட மின்னணு வாகனம் உற்பத்தி செய்யும் ஸ்டார்ட் அப் நிறுவனமான ரிவர், தமிழகத்தில் தனது இரண்டாது கடையைத் கோயம்புத்தூரில் தொடங்கியது. இண்டீ ஸ்கூட்டர்கள், ஆக்செஸ்சரீஸ் மற்றும் அதைச்சார்ந்த வணிகப் பொருட்கள் அனைத்தையும் வாடிக்கையாளர்களுக்கு அழகாக காட்சிப்படுத்தும் வகையில் ரிவர் ஸ்டோர் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இண்டீ ஸ்கூட்டர்கள் கோயம்புத்தூரில் உள்ள புதிய ரிவர் ஸ்டோரில் உடனடியாக விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,42,999-ஆக (எக்ஸ்-ஷோரூம், கோயம்புத்தூர்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவை ராமநாதபுர த்தில் 1200 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த கடை, ராஜ்துரை இ-மொபிலிட்டி எல்எல்பி நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில், சென்னையில் தனது முதல் கடையைத் தொடங்கியதன் மூலம் ரிவர் தமிழகத்தில் தடம் பதித்தது. கோயம்புத்தூரைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் விரைவான விரிவாக்கத்தைக் குறிக்கும் வகையில் வேலூர், ஈரோடு மற்றும் திருப்பூரில் கடைகளைத் திறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரிவர் தற்போது பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, ஹூப்ளி, விசாகப்பட்டினம் மற்றும் கொச்சி ஆகிய நகரங்களில் மொத்தம் 09 விற்பனை நிலையங்களை கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் அடுத்த சில மாதங்களில் மைசூர், பெல்காம், திருப்பதி, அகமதாபாத், புனே, நாக்பூர் மற்றும் டெல்லி ஆகிய இடங்களுக்கு தனது தடத்தை விரிவுபடுத்தும்.கடையின் துவக்கம் குறித்து பேசிய இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அரவிந்த் மணி, “சென்னையில் எங்கள் முதன்மை கடையின் வெற்றிக்குப் பிறகு, தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆரம்பத்தில் இருந்தே எங்களுடன் பணியாற்றும் ஊழியர்கள் பலர் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இது எங்களுக்கு ஒரு சிறப்புச் சந்தை. ஸ்டைலையும், வசதியையும் ஒன்றாக வழங்கும் ரிவர் இண்டியை இப்பகுதியில் ஒரு தனித்துவமான வாகனமாக நிறுவுவதே எங்கள் குறிக்கோளாகும். 2025 மார்ச் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் 25 ரிவர் கடைகளைத் திறப்பதே எங்கள் திட்டம்”, என்றார்.
