12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவிகித தேர்ச்சி விகிதத்தை உறுதி செய்யும் வகையில் கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவ மாணவியர்களை தொடர் கண்காணித்து பாடதிட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த ஒவ்வொரு பாட ஆசிரியர்களும் பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் வேண்டுகோள்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பாக 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி விகிதம் குறித்து தலைமையாசிரியர்களுக்கான, மீளாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி கல்வித்துறை 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வு முடிவுகள் அடிப்படையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணக்குபதிவியல், வணிகவியல், பொருளியல் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களின் தேர்ச்சி சதவிதத்தின் அடிப்படையில் 107 மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மீளாய்வு கூட்டம் நடைபெற்றது.
காலாண்டு தேர்தவிற்கும் அரையாண்டு தேர்விற்கும் உள்ள தேர்ச்சி சதவிதத்தின் வித்தியாசங்களின் அடிப்படையில் தேர்ச்சி சதவிதம் குறைவாக பெற்ற பள்ளிகளை கண்காணிப்பு அலுவலர்கள் பள்ளிகளை அதிகமுறை நேரில் பார்வையிட்டு தேர்ச்சி சதவிதத்தை உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் கண்காணிப்பு அலுவலர்கள் காலை மாலை சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதை பள்ளிகளுக்கு சென்று பார்வையிட்டு வகுப்புகள் நடைபெறுவதை உறுதி செய்து கொள்வதுடன் தேர்ச்சி சதவிதத்தை உயர்த்த தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள் மாணவ / மாணவியருக்கு உடல் நலம் மற்றும் பாடங்களை எளிய முறையில் கற்பதற்கான வழிமுறைகளை வழங்க வேண்டும்.
இந்த இரண்டு மாதத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், ஆணையர், துணை ஆட்சியர், கூடுதல் ஆட்சியர் கொண்ட குழு பள்ளிகளை கண்காணிக்கும் .
மெல்ல கற்கும் மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவர்களின் முன்னேற்றங்கள் குறித்துஅடுத்த கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும். வரும் தேர்வில் அனைத்து மாணவர்களும் முழுமையாக தேர்ச்சி அடைவதை ஒவ்வொரு பாட ஆசிரியர்களும் உறுதி செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும்.
தலைமையாசிரியர்கள் TNCMTSE, TRUST, TNTTSE, JEE, NEET, CLAT, NMMS, CLUB Activities போன்ற போட்டித் தேர்வுகளில் அதிக மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெறுவதை உறுதி செய்தல் வேண்டும். இப்பணிகளை ஆசிரியர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும்.
பள்ளி மாணவர்களிடையே தினசரி இறைவணக்க கூட்டத்தில் போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் போதை பொருள் தடுப்பு மன்றங்களின் மூலம் உறுதி மொழி, பேரணி, ஓவியம், கட்டுரை, வினாடிவினா, பேச்சுப்போட்டி, போன்ற செயல்பாடுகள் பள்ளிகளில் தொடர்ந்து நடத்தி போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். போதை சார்ந்த பொருட்கள் பள்ளி அருகாமையில் உள்ள கடைகளில் விற்கப்பட்டாலோ அல்லது மாணவர்களிடம் ஏதேனும் கண்டறியப்படாலோ உடனடியாக Child Help Line - 1098, School Education Student Help Line-14417, Anti- Drug Help line 10581போன்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம். சரயு இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.
இவ்வாய்வு கூட்டத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) திரு.முனிராஜ், மாவட்ட கல்வி அலுவலர்கள் திரு.ராஜன், திருமதி.ரமாதேவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் திரு.வெங்கடேசன் மற்றும் தலைமையாசிரிகள், ஆசிரிய பெருமக்கள் கலந்துக் கொண்டனர்.
