விளையாட்டு தின விழாவை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். விழாவில் துணை முதல்வர்கள், அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவினை நிர்வாக அலுவலர் ஆதிகேசவன் சிறப்பாக செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர்:ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பள்ளிகளில் விளையாட்டு தின விழா கோலாகலம்!!!
1/11/2025
0
வேலூர் ஸ்ரீபுரம் சிருஷ்டித்த ஸ்ரீ சக்தி அம்மாவின் அருள் ஆசியுடன் ஸ்ரீ நாராயணி பள்ளிகளில் விளையாட்டு தின விழா நேற்று நடந்தது. விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக விளையாட்டுத்துறை நிர்வாக அலுவலர் முனைவர் ஏ பாலமுருகன் மற்றும் ஹலோ மூத்த இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ரவி சதுர்வேதி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து மாணவர்களிடையே சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர் .தாளாளர் முனைவர் எம். சுரேஷ் பாபு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். பள்ளிகளின் முதல்வர்கள் கே. சுப்பிரமணி மற்றும் லட்சுமி கலந்து கொண்டு சிறப்பித்தனர். தலைமை ஆலோசகர் முனைவர் ச. ரமேஷ் வாழ்த்துரை வழங்கினார்.

