கோவை:13 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் இசை நிகழ்ச்சி நடத்த போவதாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பெருமிதம்!!!

sen reporter
0


AI தொழில்நுட்பம் கொண்டு எந்த விதமான இசை மற்றும்  பிற்காலத்தில் நடத்தப் போவதில்லை என தெரிவித்தார். கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் நாளை Rocks on Harris என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்,இந்த இசை நிகழ்ச்சியில் 36 பாடல்கள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.இந்த நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு தொடங்கி இருப்பதாகவும் கோவையில் பாடுவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

இசை நிகழ்ச்சி என்பது கல்லூரி வாழ்க்கை,சோகம்,கல்யாணம் வாழ்க்கை உள்ளிட்டவை கடந்து கேட்டு மகிழ்வது தான் இசை என்றும் இந்த நிகழ்ச்சியில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பார்வையாளராக பங்கேற்பதாக தெரிவித்தார்.மேலும் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களை உற்சாகப்படுத்த Melody Songs,Love Songs,Dance Songs போன்ற 3 வகையான பாடல்கள் இடம் பெற்ற உள்ளது.இசை என்பது அனைவராலும் ஈர்க்க கூடிய ஒன்றும் என்றும் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அனைவரும் கண்டிப்பாக இசையை கேட்பார்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.2023-ம் ஆண்டு சென்னையில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது அதன் பிறகு தற்போது கோவையில் நடைபெற உள்ளது மாநகரப் பகுதியில் 40 ஸ்பீக்கர்கள் கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில் இங்கு 120-க்கும் மேற்பட்ட ஸ்பீக்கர்கள் கொண்டு திசை நிகழ்ச்சி நடத்தப் போவதாகவும் இதனால் அனைவரும் உற்சாகமாக கண்டுகளிப்பார்கள் எனவும் கூறினர்.இதுபோல மாநகர் பகுதியில் அதிகளவில் ஸ்பீக்கர் கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினால் காவல்துறையினர் அனுமதிக்க மாட்டார்கள்.13 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதாகவும் நண்பன் திரைப்படம் ஆடியோ Launch-யின் போது கோவையில் இசை நிகழ்ச்சி நடத்தியதாகவும் தெரிவித்தார்.மேலும் ஏ.ஐ தொழில்நுட்பம் கொண்டு இசையமைத்தால் பாடகர்களுக்கு உண்டான வாய்ப்புகளுக்கு கிடைத்தாகது அவர்கள் பெயர் வெளியே தெரியாது இன்றும் பிற்காலத்திலும் ஏ.ஐ தொழில்நுட்பம் கொண்டு எப்போதும் இசையமைக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top