கோவை:பா.ஜ.க, அ.தி.மு.க வை மிரட்டி பணிய வைத்து இருப்பதாகவும், கூட்டணி அமைந்து விட்டதே என்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி ஏதோ ஒரு காரணத்தை கூறி சமாளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சனம் !!!

sen reporter
0

தி.மு.க வோடு கூட்டணி சேர்ந்து இருக்கிறது, அதை பா.ஜ.க வே அறிவித்து இருக்கிறது. இதைப் பார்க்கும் போது அ.தி.மு.க தலைமையில் கூட்டணியா ? இல்லை. பா.ஜ.க தலைமையில் கூட்டணியா ? என்பதே சந்தேகமாக இருக்கிறது.அ.தி.மு.க தொண்டர்கள் இதை மனப் பூர்வமாக ஏற்க வாய்ப்பு இல்லை என்று தான் நான் நம்புகிறேன்.கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 75 வது ஆண்டு விழா, ஜனநாயகம் காப்போம் கருத்தரங்கம் மற்றும் மாணவர் பாராளுமன்றத்தில் கலந்து கொள்ள வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் பேசும் போது : -


அண்மையில் நாடாளுமன்றத்தில் wafq திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்றி, அதன் மூலம், இஸ்லாமிய சமூகத்தை பெரும் அச்சுறுத்தலுக்குள் ஆட்படுத்தி இருக்கிறார்கள். ஒவ்வொரு மதமும், அந்தந்த மதங்களுக்கான சொத்துக்களை, அம்மதம் சார்ந்த நிர்வாகக் குழுக்களைக் கொண்டே நிர்வகித்து வருகின்றன. ஆனால் இஸ்லாமிய சமூகத்தின் wafq சொத்துக்களை நிர்வகிப்பதற்கு, அமைக்கப்பட இருக்கும் குழுக்களில், wafq குழுக்களில் அல்லது, wafq வாரியத்தில், இஸ்லாமியர் அல்லாதவர்களை உறுப்பினராக நியமிப்பதற்கு, ஏதுவாக சட்டத்தை இயற்றி இருக்கிறது பா.ஜ.க அரசு. இது ஒரு அடாவடித்தனமான அரசியலாகும். இந்த பாசிச தாக்குதலை சட்டப்படியே இந்த அரசு அரங்கேற்றி இருப்பது, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும். இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் வலியுறுத்த வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின், இதனை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பது பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் நடவடிக்கையாக இருக்கும். இந்தியா முழுவதும் பா.ஜ.க அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இச்சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்கின்ற வேண்டுகோளை விடுதலை சிறுத்தைகள் கட்சி முன் வைக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தமிழ்நாடு மக்கள் விரோத நடவடிக்கைகளை, உச்ச நீதிமன்றமே வெளிப்படையாக கண்டித்து இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமான முறையில் ஒரு ஆளுநர், மாற்ற வேண்டிய சட்ட பூர்வமான கடமைகளில் இருந்து விலகி, தமிழ்நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிற ஆளும் கட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்தக் கூடிய வகையிலே, ஆர்.என்.ரவி பல்கலைக் கழக மசோதாக்களை எல்லாம் கிடப்பில் போட்டு வைத்து இருந்தார். உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை விசாரித்ததில், ஆளுநர் கடமை தவறு இருக்கிறார். ஆகவே அந்த மசோதாக்கள் அனைத்தையும் நாங்கள் சட்டமாக அங்கீகரிக்கிறோம் என்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அண்மையிலே வழங்கி இருக்கிறது.


 அது இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய ஜனநாயக ஒளியேற்றக் கூடிய ஒரு தீர்ப்பாக அமைந்து இருக்கிறது.தமிழ்நாடு முதல்வர், ஸ்டாலின் சட்ட பூர்வமாக நடத்திய இயக்கத்தில் வெற்றி பெற்று இருக்கிறார். தமிழ்நாட்டு மக்களும் இதில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஆளுநர் ரவி தார்மீக பொறுப்பேற்று பதவி விலகி இருக்க வேண்டும், ஆனால் அவர் நிச்சயம் விலக மாட்டார். ஆகவே குடியரசு தலைவர் இதில் உடனடியாக தலையிட்டு, ஆளுநர் R.N. Ravi பதவி நீக்கம் செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.பா.ஜ.க., அ.தி.மு.க வை மிரட்டி உருட்டி, பணிய வைத்து கூட்டணி அமைத்து இருப்பதாக அமித்ஷா அறிவிக்கிற நிலையை நாம் இங்கு பார்க்க முடிகிறது.


 கூட்டணி ஆட்சி அமைப்போம் என அ.தி.மு.க தலைமை அறிவிக்கவில்லை. அ.தி.மு.க வோடு கூட்டணி சேர்ந்து இருக்கிற பா.ஜ.க வே அறிவித்து இருக்கிறது. இதைப் பார்க்கும் போது அ.தி.மு.க தலைமையில் கூட்டணியா ? இல்லை. பா.ஜ.க தலைமையில் கூட்டணியா ? என்பதே சந்தேகமாக இருக்கிறது. அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி என்றால் அ.தி.மு.க தலைவர், பொதுச் செயலாளர் நாங்கள் கூட்டணி ஆட்சி அமைக்க போகிறோம் என அறிவித்து இருக்க வேண்டும். ஆனால் பத்திரிக்கையாளர் அழைத்தது பா.ஜ.க, கூட்டணியை அறிவித்தது பா.ஜ.க, கூட்டணி ஆட்சி என அறிவித்து இருப்பதும் பா.ஜ.க. அப்படியானால் இங்கு அ.தி.மு.க வினர் ரோல் என்ன என்பது கேள்விக் குறியாக இருக்கிறது. அ.தி.மு.க தொண்டர்கள் இதை மனப் பூர்வமாக ஏற்க வாய்ப்பு இல்லை என்று தான் நான் நம்புகிறேன். இந்தக் கூட்டணி ஏற்கனவே உருவான கூட்டணி மக்களால் புறக்கணிக்கப்பட்ட கூட்டணி. எந்த தாக்கமும் பெரிதாக, தி.மு.க கூட்டணிக்கு எதிராக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எதிராக, எந்த தாக்கமும் ஏற்பட்டு விடாது என்று நான் நம்புகிறேன் எனக் கூறினார். 


செல்லூர் ராஜு அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லையே என்ற செய்தியாளர் கேள்விக்கு, செல்லூர் ராஜூ போன்ற அ.தி.மு.க வினருக்கே இதில் உடன்பாடு இல்லை. முன்னாள் டி. ஜெயக்குமார் அ.தி.மு.க பா.ஜ.க வுடன் கூட்டணி அமைத்தால், நான் கட்சியில் இருந்து வெளியேறி விடுவேன் என சொல்லக் கூடிய அளவுக்கு, அ.தி.மு.க வின் மாறுபட்ட கருத்துக்கள் ஏற்கனவே இருந்தன, ஆனால் அதையெல்லாம் மீறி எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவோடு அமர்ந்து கூட்டணி, அமைத்ததற்கு சாட்சியமாக இருந்து கருக்கிறார். இதில் மற்ற அ.தி.மு.க அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் இதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் என கூறினார். இதில் செங்கோட்டையன் போகின்றோர் அமித்ஷாவை தனியாக சென்று, சந்தித்து பேசிய சூழ்நிலைகளும் உருவாக இருந்தது. அது எதற்காக என்றெல்லாம் நமக்கு தெரியாது. இவை அனைத்தையும் நாம் ஒப்பிட்டு பார்க்கும் போது, அ.தி.மு.க வுக்கு ஏதோ ஒரு நெருக்கடியை பா.ஜ.க கொடுத்து இருப்பதை நம்மால் கணித்துக் கொள்ள முடியும். அந்த அடிப்படையில் தான் இந்த கூட்டணியை உருவாக இருக்கிறது என்பதை யூகிக்க முடிகிறது என்று கூறினார்.


பொள்ளாச்சி மாணவி, பள்ளியின் வெளியில் அமர வைக்கப்பட்டு பரிச்சை எழுத வைக்கப்பட்ட சம்பவம் குறித்த கேள்விக்கு,அந்த சம்பவத்திற்கு உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பின் மகேஷ் உறுது அளித்து இருக்கிறார். இது குறித்து வழக்கு பதிவும் செய்யப்பட்டு இருக்கிறது, இதைக் கண்டித்து கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் செய்து இருக்கிறது என்று கூறினார். அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியால் சிறுபான்மையினரின் போட்டு பா.ஜ.க விற்கு கிடைக்குமா ? என்ற கேள்விக்கு, பா.ஜ.க இருக்கிற அணியில், சிறுபான்மையினர் வாக்களிப்பதற்கு, ஆதரிப்பதற்கு இந்திய அளவில் வாய்ப்பு இல்லை. அவர்கள் வெளிப்படையாகவே முஸ்லிம் வாக்குகள், கிறிஸ்து வாக்குகள் தேவை இல்லை என கூறும் அடிப்படையில் தான் பா.ஜ.க ஒரு நிலைப்பாட்டை எடுத்து செயல்படுகிறது. அப்படிப்பட்ட பா.ஜ.க வோடு அதிமுக கூட்டணியில் இணைகிறது என்றால், அப்படிப்பட்ட அணிக்கு எப்படி சிறுபான்மையினர் வாக்கு போய் சேரும். இந்த wafq திருத்த சட்ட மசோதாவை, எதிர்த்து மாநிலங்களவையில் அ.தி.மு.க வினர் வாக்களித்து உள்ளார்கள். ஆனால் திடீரென பா.ஜ.க ஒரு கூட்டணி அமைத்து இருக்கிறார்கள். இந்த இடைப்பட்ட இரண்டு மூன்று நாட்களில் என்ன நிகழ்ந்தது என்பது, யாருக்கும் தெரியாது. முழுமையாக அ.தி.மு.க., பா.ஜ.க வின் கட்டுப்பாட்டிற்குள் சென்று இருக்கிறதே இது காட்டுவதாக கூறினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top