கோவை:நிலத்தை பதிவு செய்து வாங்கி விட்டு பணம் தராமல் ,துப்பாக்கியை காட்டி மிரட்டுவதாக வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் அலுவலகத்தில் புகார் மனு!!!

sen reporter
0

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் உப்புபாளையம் அடுத்த திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சேமலையப்பன் என்பவரின் மகன் பாலமுருகன்.இவர் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.அவர்  அளித்துள்ள மனுவில் தமக்கு  சொந்தமான சொத்து திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ளது அதே பகுதியை சேர்ந்த எனது சித்தப்பா மகனான முருகேசன் என்பவர் தமக்கு  சொந்தமான இடத்தை  கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி வாங்கினார். அதற்கான தொகையை 10 முதல் 15 நாட்களில்  இடம் தருவதாக கூறியுள்ளார்.  சித்தப்பா மகன் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் 15 நாட்களுக்கு பின்பு முருகேசன் இடம்   பணத்தை கேட்ட போது, எந்த தொகையும் தர முடியாது என்று கூறினார். அதன் பிறகு பலமுறை பணத்தை கேட்டும் அவர் சரியான முறையில் பதில் அளிக்காமல் இருந்துள்ளார். பின்பு கடந்த 4 ஆம் தேதி    தோட்டத்திற்கு வந்த போது முருகேசனிடம்  தனக்கு தரவேண்டிய பணம் குறித்து பேசியுள்ளார். 


அதற்கு அவர்  தர வேண்டிய தொகை எதையும் தர முடியாது. இதை மீறி நீ எங்காவது, யாரிடமாவது புகார் அளித்தால் திமுக அமைச்சரிடம் கூறி உன்னை இருக்கும் இடம் தெரியாமல் அழித்து விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். மேலும்  முருகேசன் வைத்திருந்த  துப்பாக்கியை காட்டி சுட்டு விடுவேன் என்று கூறியும் மிரட்டினார். இதேபோல கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, கார்வெளி கிராமத்தை சேர்ந்த பழனிசாமியின் மகன் இராமலிங்க சொக்கவேல் ,ரதி ,மணிவேல், கதிர்வேல் ,அருண்பிரகாஷ், அருணபிரசாத், முருகன் உள்ளிட்ட பலரிடம் முருகேசன்  நில மோசடி செய்துள்ளார்.எனவே முருகேசன் அடியாட்கள் உதவியுடன் வெள்ளகோவில் தாலுகாவில் பல சட்டவிரோத நடவடிக்கைகளில் குறிப்பாக நில அபகரிப்பு, கந்து வட்டி மோசடி, அரசியல் பின்புலம் கொண்டு அப்பாவி மக்களை மிரட்டி நிலங்களை அபகரிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பாக பலமுறை புகார்' அளித்தும் அப்புகார் மனு மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அவரது அரசியல் செல்வாக்கால் மனுக்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. எனவே  அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பாலமுருகன்  மனுவில் குறிப்பிட்டுள்ளார் .

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top