
கோவை குரும்பபாளையம் பகுதியில் உள்ள ஆதித்யா தொழில் நுட்ப கல்லூரியில் தொழில் மாநாடு 2025 எனும் கருத்தரங்கம் நடைபெற்றது.தொழில் துறை மற்றும் மாணவர்களின் கல்வி திறனை இணைக்கும் வகையில் நடைபெற்ற இதில் ஆதித்யா தொழில் நுட்ப கல்லூரியின் தலைவர் பொறியாளர் சுகுமாறன் தலைமை தாங்கி பேசினார்.அப்போது பேசிய அவர்,தற்போது தொழில் துறை மற்றும் கல்வி மாற்றத்தில் தொழில் துறையோடு மாணவர்கள் கல்வி கற்பதுஅவசியம்எனதெரிவித்தார். கல்லூரியில் பாடங்களை பயிலும் போதே மாணவர்கள் தொழில் துறை சார்ந்த பயிற்சிகளை எடுத்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இதனால் மாணவர்கள் தங்களது புதிய நுட்பங்களை தொழில் துறையில் கொண்டு வர முடியும் என தெரிவித்தார்.தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் கோ இந்தியா மற்றும் ஆதித்யா தொழில் நுட்ப கல்லூரி இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.கருத்தரங்கில் பல்வேறு துறைகளை சார்ந்த தொழில் துறையினர் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.நிகழ்ச்சியில், ஆதித்யா தொழில்நுட்ப கல்லூரியின் இயக்குநர் முனைவர் ஜோசப் வி. தானிகல், இயக்குநர், மேலாண்மை அறங்காவலர் பிரவீண் குமார்,கோ இந்தியா துணைத் தலைவர் மிதுன் ராம்தாஸ்,கல்லூரி முதல்வர் முனைவர். சோமசுந்தரேஸ்வரி, முதல்வர், கல்வி துறை தலைவர் முனைவர். ராஜேந்திரன்,உட்பட பல்வேறு தொழில் துறையினர்,துறைதலைவர்கள், பேராசிரியர்கள்எனபலர்கலந்துகொண்டனர்.