கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் மேற்கு மண்டல காவல்துறை அதிகாரிகளுடன் தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் ஆலோசனை மேற்கொண்டார்!!!
5/23/2025
0
இரண்டு நாள் பயணமாக கோவை வந்துள்ள தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் மேற்கு மண்டல காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் அப்போது மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் காவல்துறை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது சட்டம் ஒழுங்கை சீரான முறையில் கையாள்வது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய டிஜிபி சங்கர் ஜிவால் எல்லையோட பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியை தீவிரப் படுத்துமாறும் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர் இந்த கூட்டத்தில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார் கோவை சரக காவல்துறை தலைவர் சசி மோகன் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் உமா மற்றும் கோவை,நீலகிரி,ஈரோடு உள்ளிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.