தற்போது இஸ்லாமிய மக்களின் வக்ஃப் சொத்துக்களை அபகரிக்க வேண்டும்; அழிக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு, கூட்டுப் பாராளுமன்ற குழுவில் சமர்ப்பிக்கபட்ட ஆயிரக்கணக்கான ஆட்சேபனைகளைப் பரிசீலிக்காமல், ஜனநாயக சக்திகளின் பாராளுமன்ற எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல், குறிப்பாக தமிழக சட்டமன்ற தீர்மானத்தை மதிக்காமல் ஒன்றிய பாஜக அரசு தற்போது கொண்டு வந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையாகவும், மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோவை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோவை மேற்கு மண்டலம் சார்பாக 30/04/2025 (புதன்கிழமை) அன்று மாலை 4 மணி அளவில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் இ. உமர் அவர்கள் தலைமையில் செஞ்சிலுவை சங்கம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வக்ஃப் சொத்துக்களை அபகரிக்காதே! இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்காதே! ஒன்றிய அரசே, வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெரு! உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பியவாறு செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர் மேலும் ஒன்றுகூடிய இஸ்லாமிய மக்கள் வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பினர். தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர், தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர் ப.அப்துல் சமது MLA அவர்கள், கோவை பாராளுமன்ற உறுப்பினர் திரு கணபதி ராஜ்குமார் MP அவர்கள், காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸ் சட்டப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அலீம் அல் புகாரி அவர்கள், தமுமுக மாநில செயலாளர் சாகுல் ஹமீது அவர்கள் , மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் பழனி பாரூக் அவர்கள், திமுக மாவட்ட செயலாளர் திரு நா.கார்த்திக் அவர்கள், சாதிக் அலி, அக்பர் அலி, சுல்தான் அமீர், ஈரோடு ரிஸ்வான் ஆகியோர் கண்டனயுரையாற்றினார்கள்.
இக்கண்டன ஆர்ப்பாட்டம் சர்புதீன் , நசீர்தீன், அப்துல் கபூர், சித்திக், அப்துல் ஹக்கீம், சம்சுதீன், அப்துல் சமது, அப்துல் கையூம் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர் முஜிபுர் ரஹ்மான், பவானி முஹம்மது, அபுசாலி , அபுதாஹிர், பல்லடம் முஜிபுர் ரஹ்மான், ரசீதா பேகம் ஆகியோர் கண்டன கோஷங்களை எழுப்பினர் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு வக்ஃப் சட்டத்திற்கு எதிராக தங்களது வலுவான எதிர்ப்புக் குரலை பதிவு செய்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கீழ்வரும் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன.
தீர்மானம்1.
ஒன்றிய அரசே-வக்ஃப் வாரிய திருத்தசட்டத்தை வாபஸ் வாங்கு.அரசியலமைப்பு சட்டபிரிவு 25/26 வழங்கியுள்ள மத உரிமைகளுக்கு முரணாகவும்,இஸ்லாமிய மக்களின் சொத்துகளை,கலாச்சாரங்களை அழிக்கும் உள் நோக்கத்துடனும், கூட்டு பாரளுமன்ற குழுவில் அளிக்கபட்ட ஆட்சேபனைகளை கருத்தில் கொள்ளாமலும் சர்வாதிகார போக்கில் பாரளுமன்றத்தில் நிறைவேட்டபட்ட வக்ஃப் திருத்த சட்டம் 2024.யை ஒன்றிய அரசு ரத்துசெய்யவேண்டும் என இப்போரட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம்2-
பஹல்காம் படுகொலை கண்டணம்.காஷ்மீர் பஹல்காம் சுற்றுலா சென்ற அப்பாவிகளை கொன்ற கொடுர செயலை இப்போரட்டத்தின் வாயிலாக கடுமையாக கண்டிக்கிறோம்.இச்செயலில் ஈடுபட்ட மனிதகுல விரோதிகளை சட்டத்தின் வாயிலாக கடுமையாக தண்டிக்க வேண்டும் என இப்போரட்டத்தின் வாயிலாக வழியுறுத்துகிறோம்.காஷ்மீர் மாநில மக்கள் மற்றும் இராணுவ வீர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தோல்வியடைந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ராஜினாமா செய்யவேண்டும் என இப்போரட்டத்தின் வாயிலாக வழியுறுத்துகிறோம்.
தீர்மானம்3-
கோவைமாவட்டம் காரமடை காளம்பாளைம் ஆசுர்கானா பள்ளிவாசல்/அடக்கஸ்தல வக்ஃப் சொத்தில் உண்மைக்கு புறம்பாக நீதீமன்றத்தில் தகவல் அளித்து மதபதட்ட சூழலை உருவாக்கும் வருவாய் கோட்டாச்சியர் P.A கோவிந்தனை இப்போரட்டத்தின் வாயிலாக கடுமையாக கண்டிக்கிறோம். கோவை மாவட்ட ஆட்சிதலைவரும்,வக்ஃப் வாரிய நிர்வாகமும் விரைவாக இப்பிரச்சினையில் தலையிட்டு நியாயமான முடிவை எடுக்கதவறினால் கோவை மாவட்ட ஆட்சிதலைவரை கண்டித்து ஆட்சிதலைவர் அலுவலகத்தை முற்றுகை யிடும் போராட்டம் நடத்தப்படும் என இப்போரட்டத்தின் வாயிலாக எச்சரிக்கை விடுக்கிறோம்.ஆகிய மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள், ஜமாஅத்கள், இஸ்லாமிய இயங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், உலமாக்கள் ஆகியோர் கலந்து கொண்டு வலுவான எதிர்ப்புகளை தெரிவித்தனர். மேலும் ஆண்கள் பெண்கள் என 5000க்கும் மேற்பட்டோர்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர்.இறுதியாக சமூக நீதி மாணவர் இயக்கம் மாநில செயலாளர் அம்ஜத் அலி கான் நன்றியுரை ஆற்றினார்