இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி, வேலூர் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்எல்ஏ, மாவட்ட பொருளாளர் சி. நரசிம்மன், மாவட்ட துணைச் செயலாளர் ஜி. எஸ்.அரசு, மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வேலூர்:மறைந்த திமுக முன்னாள்தலைவர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாள் விழா!!!
6/03/2025
0
வேலூர் மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் வேலூர் மாவட்ட திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் தலைவர் டாக்டர் கலைஞரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார், அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இதையடுத்து 1102 பேருக்கு பிரியாணி வழங்கி மகிழ்ந்தார் நந்தகுமார்.