யோகா தின நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிமாவட்ட கல்வி அலுவலர் கோமதி பேசினார்.பள்ளி பருவத்திலேயே மாணவ மாணவிகள் யோகா கலையை நாள்தோறும் பயிற்சி மூலம் கற்று உடல் மனம் ஆரோக்கியம் ஒருநிலை படுத்த வேண்டும். கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்த மனிதராக உருவாக்கும் யோகா பயிற்சி கற்பதன் மூலம் முழுமையான மனிதராக உணர முடியும். வாழ்க்கையில் லட்சியங்களை. அடைவதற்கும் யோகா பயிற்சி மிக முக்கியமானது என்று நிகழ்ச்சிகள் பங்கு பெற்றவர்கள் பேசினர். நிகழ்ச்சியில் கேலக்ஸி ஹெல்த் எஜுகேஷன் மற்றும் யோகா இயற்கை மருத்துவ மையத்தின் நிர்வாகி கோமதி பங்கேற்று இயற்கை மருத்துவம் குறித்து மாணவ மாணவிகளிடம் பேசினார்.பல்வேறு யோகா கலைகள் குறித்து மாணவ மாணவிகள் அறியும் வகையில் யோகா கலை நிபுணர்கள் பயிற்சி வழங்கினார்.
கோவை கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம். மற்றும் முப்பெரும் விழா!!!
6/22/2025
0
மாணவ மாணவிகள் உடல் மனம் ஆரோக்கியத்தை தரும் யோகா பயிற்சி கற்க மாவட்ட கல்வி அலுவலர் கோமதி வேண்டுகோள். கோயம்புத்தூர் சர்வதேச யோகா தினமான ஜூன் 21 கொண்டாடும் வகையில் கோவை கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்வு. மரக்கன்றுகள் நடும் நிகழ்வு உள்ளிட்ட முப்பெரும் நிகழ்வு மாவட்ட கல்வி த்துறை மற்றும் இமயம் தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்தியது. நிகழ்ச்சிக்கு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மணி மாலா வரவேற்று பேசினார்.உலக சமுதாய நல்லிணக்க பேரவை தலைவர் வழக்கறிஞர் திரிலோக சந்தர் .இமயம் தொண்டு நிறுவனத்தின் தலைவர் மீனாட்சி முன்னிலை வகித்தனர்.