கோவையில் மாரியம்மன் கோயில் சிலைகள் உடைக்கப்பட்ட வழக்கில் வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்!!
6/25/2025
0
கோவை மாவட்டம் நீலாம்பூர், கரையம்பாளையம் சந்திப்பில் அமைந்துள்ளது பிளேக் மாரியம்மன் கோயில்.கடந்த சில தினங்களுக்கு முன்பு இக்கோயிலில் உள்ள விநாயகர், மூஞ்சூறு, ராகு மற்றும் கேது சிலைகள் அடையாளம் தெரியாதநபர்களால்சேதப்படுத்தப்பட்டன. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து கோயில் அர்ச்சகர் சண்முகம், சூலூர் காவல் நிலையத்தில்புகார்அளித்தார்.இதன்பேரில், சூலூர் காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, சந்தேகப்படும்படியான நபர் அங்கு சுற்றித்திரிவதை போலீசார் கண்டறிந்தனர்.இதைத் தொடர்ந்து, அந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது, அந்த நபர் பீகார் மாநிலம் நலந்தா மாவட்டத்தைச் சேர்ந்த கரன்குமார் (32) என்பதும், தற்போது தெலுங்கானா மாநிலம் மெட்சல் மாவட்டத்தில் வசித்து வருவதும் தெரியவந்தது. மதுபோதையில் சென்ற போது குடிக்க தண்ணீர் கிடைக்காததால், ஆத்திரத்தில் சாமி சிலைகளை தான் உடைத்ததாக போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.