தொழில்நுட்ப முன்னேற்றம், பயிற்சி பெற்ற மருத்துவ பணியாளர்கள் மற்றும் சமூக விழிப்புணர்வு இயக்கங்கள் மூலம் இந்த புதிய இரத்த வங்கி செயல்படுகிறது. 1,800 சதுர அடி பரப்பளவிலான இந்த வசதி, பாதுகாப்பு, தரம் மற்றும் செயல்திறனுக்கான உயர் ஒழுங்குமுறை தரநிலைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இரத்த சேகரிப்பு, கூறுப் பிரிப்பு, அபெரெசிஸ், சேமிப்பு மற்றும் பரிசோதனைக்கான மேம்பட்ட உபகரணங்கள்பொருத்தப்பட்டுள்ளன.இந்த தொடக்க நிகழ்வில், கரூர் வைஸ்யா வங்கி ஊழியர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்ற தன்னார்வ இரத்த தான முகாமும் நடைபெற்றது.
கோவைஇரத்ததானம் குறித்த விழிப்புணர்வு தற்போது மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது கேவிபிவிஜிஎம் அறக்கட்டளை இரத்த வங்கியின் தொடக்க விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் பேச்சு!!!
6/15/2025
0
கரூர் வைஸ்யா வங்கி மற்றும் விஜிஎம் அறக்கட்டளை இணைந்து, கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள விஜிஎம் பல்நோக்கு மருத்துவமனையில்"கேவிபி–விஜிஎம் அறக்கட்டளை இரத்த வங்கி"யை உலக இரத்த தானம் செய்பவர்கள் தினத்தன்று திறந்து வைத்தது.இந்த நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் மற்றும் கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ் பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு இரத்த வங்கியை தொடங்கிவைத்தனர். மேலும், விஜிஎம் மருத்துவமனையின் தலைவரும் விஜிஎம் இரத்த வங்கி திட்டத்தின் தலைவருமான டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத், மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள்உடன்இருந்தனர். இந்த தொடக்க நிகழ்வில் பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் கூறுகையில், இரத்ததானம் குறித்த விழிப்புணர்வு தற்போது மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது என்று கூறிய அவர், இதுபோன்ற சிறப்பம்சங்கள் இருக்கையில் அதிக அளவிலான மக்கள் தன்னார்வமாக இரத்த தானம் செய்ய முன்வருவார்கள் என்றார். மேலும், இந்த இரத்த வங்கி மூலம் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும் என்று கூறி, கரூர் வைஸ்யா வங்கி மற்றும் விஜிஎம் மருத்துவமனைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
