ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் ஸ்ரீராமபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் மற்றும் இருசக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ரெட்டியார் சத்திரத்தில் ரயில் நிலையம் மற்றும் குட்செட் அமைக்க கோரியும். புதுச்சத்திரம் முதல் முடக்கு சாலை வரை மாநில நெடுஞ்சாலை வரைபரமரிப்பு வேலை துரிதமாக செயல்படுத்த கோரியும். ரெட்டியார்சத்திரத்தில் மக்காச்சோளம் சேமிப்புக் கிடங்கு அமைக்க கோரியும். வேளாண் விலைப் பொருளுக்கு கட்டுப்படியான விலை வழங்கிட கோரியும் இந்த மக்கள் கோரிக்கை இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் பெருமாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கவிதா, சையது ஆதாம் சேட், நாகராஜ்,சந்துரு, தயாளன், முருகன்,ஆறுமுகம் மற்றும் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டு இருசக்கர வாகன பிரச்சாரம் ஸ்ரீராமபுரத்தில் ஆரம்பித்து புதுச்சத்திரம், செம்மடைப்பட்டி, ரெட்டியார்சத்திரம், புதுப்பட்டி, கன்னிவாடியில் நிறைவுவாக திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சச்சிதானந்தம் மக்கள் சந்திப்பு இயக்கத்தை முடித்து வைத்து சிறப்புரை ஆற்றினார்,
திண்டுக்கல்:ஸ்ரீராமபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது!!!
6/21/2025
0
