திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் இயங்கிவரும் ரெட்டியார்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரிக்கு முதல் நாள் வருகைபுரிந்த முதலாம் ஆண்டு மாணவ மாணவியர்களை வரவேற்கும் நிகழ்ச்சியாயாக வரவேற்பு நிகழ்ச்சி கூட்டத்திற்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் கல்லூரி முதல்வர் பு. புனிதவதி அவர்கள் தலைமை உரையில் கல்லூரி மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, தமிழக அரசால் வழங்கப்படும் புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டம் குறித்து மாணவ மாணவியர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக பொருளாளரும் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர்மான கு.சத்தியமூர்த்தி தனது சிறப்புரையில் விரைவில் திறக்கப்பட்டுள்ள கல்லூரியின் புதிய கட்டிடத்தில் மாணவ மாணவியர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள நவீன புதிய வசதிகள் குறித்தும் மற்றும் புதிய கல்லூரி கட்டிடப் பணிகளை விரைந்து முடித்து விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது குறித்தும் மற்றும் புதிய கல்லூரி அமைவிடம் மற்றும் கட்டிடப் பணிகள் குறித்து மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களால் எடுக்கப்பட்ட முன்னெடுப்புகள் குறித்தும் பேசினார். கன்னிவாடி பேரூராட்சி முன்னாள் தலைவர் ராஜசேகர் இக்கூட்டத்தில் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு வணிகவியல் துறை தலைவர். மு. சரவணன் வரவேற்புரை வழங்கினார். வேதியியல் துறை கௌரவ விரிவுரையாளர் டாக்டர். கௌரி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். இறுதியாக வேதியியல் துறை தலைவர் டாக்டர். ஜெயப்பிரதா நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் கன்னிவாடி பேரூராட்சி மன்ற உறுப்பினர் இளங்கோவன் உட்பட அனைத்து அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல்:ரெட்டியார்சத்திரம் அரசு கலை கல்லூரி முதலாம் ஆண்டு மாணவ மாணவியர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது!!!
6/30/2025
0