திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பண்ணப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தெத்துப்பட்டி குளத்தில் டிப்பர் லாரிகளில் மண் எடுத்து செல்லும் லாரிகளை மடக்கி பிடித்த பொதுமக்கள் விவசாயிகளுக்கு விவசாய நிலங்களுக்கு வண்டல் மண் எடுக்க அரசு ஒரு ஆணை வழங்கி உள்ளது. அந்த ஆணையில் எந்த குலத்தில் எடுத்து விவசாய நிலத்திற்கு செல்ல ஆன்லைனில் பதிவு செய்த பின்பு தாசில்தார் இடம் பர்மிட் வாங்க வேண்டும். அதில் சம்பந்தப்பட்ட நிலத்தின் சர்வே நம்பர் உட்பட வரும் இந்த பர்மிட் வைத்து விவசாயிகள் விவசாய டிராக்டர்களில் மட்டுமே அவருடைய நிலங்களுக்கு எடுத்துச் செல்லும் உத்தரவாகும். ஆனால் விவசாயிகளுக்கு அல்லாமல் விற்பனை செய்ததற்காக டிப்பர் மற்றும் டாரஸ் லாரிகளில் எடுத்துச் செல்வதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் விவசாயிகளுக்கான இது அனுமதி சீட்டு நீங்கள் விற்பனைக்கு எடுத்துச் செல்வது கூடாது என்பது வாக்குவாதத்தில் ஈடுபட்டு லாரிகளை சிறை பிடித்தனர். திண்டுக்கல் மேற்கு தாசில்தார் அவர்களுக்கு தகவல் கிடைக்கவே நேரடியாகவே வந்து மண் விற்பனைக்காக செல்லும் லாரிகளை சிறைப்பிடித்த பொதுமக்களிடம் விசாரணை செய்தார் இதில் உண்மையான விபரம் தெரிந்தும் விற்பனைக்கு எடுத்துச் செல்லும் லாரி மற்றும் ஓட்டுநர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பின்னர் தெரிய வருகிறது நடவடிக்கை எடுக்கவில்லை என்று சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து மனு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறும். என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கூறுகின்றனர். ஆகவே இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்களும் கனிம வள உதவி இயக்குனர் அவர்களும் சம்பந்தப்பட்டவர்களை கடுமையாக நடவடிக்க எடுக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
திண்டுக்கல்: ரெட்டியார்சத்திரம் கன்னிவாடி அருகே மண் லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்!!!
7/20/2025
0