தூத்துக்குடி:சர்வதேச போட்டியில் தங்க பதக்கங்கள் வென்ற தூத்துக்குடி மாணவிக்கு மேயர் வாழ்த்து!!!
7/26/2025
0
சர்வதேச ஸ்ட்ரென்த் லிஃப்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கங்கள் வென்ற தூத்துக்குடி மாணவிக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து தெரிவித்தார்.தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஸ்ட்ரென்த் லிஃப்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தூத்துக்குடியை சேர்ந்த மாணவி ரா.பீரீத்தி சிவ பிச்சம்மாள் பங்கேற்று, மூன்று தங்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில் அவர் மேயர் ஜெகன் பெரியசாமியை சேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.மாணவி ரா.பீரீத்தி சிவ பிச்சம்மாள் மேலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு ஊருக்கும் தமிழ்நாட்டிற்கும் இந்திய திருநாட்டிற்கும் பெருமைகள் பல சேர்க்க வேண்டும் என்று மேயர் வாழ்த்தினார். வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், தமிழ்நாடு காது கேளாதோர் சங்கத்தின் துணை தலைவர் மெய்கண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
