சுமார் 11 மணி அளவில் அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள் இதுவரை கட்டிடம் கேட்டு எங்களுக்கு எந்த கோரிக்கையும் வரவில்லை என்று கூறவே நான்கு முறை கிராமசபை கூட்டத்தில்தீர்மானம்நிறைவேற்றியுள்ளோம் மேற்கொண்டு எதற்கு நாங்கள் தனியாக மனு அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். ஆட்சியர் மற்றும் அமைச்சர் அவர்களிடம் இது பற்றி நேரடியாக எடுத்து கூறி மனு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கவே ஆவேசமடைந்த பொதுமக்கள் பிறகு எதற்காக கிராமசபை கூட்டம் என்று ஒன்றை நடத்தி அதில் நடத்தப்படும் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள் என்று கேள்வி எழுப்பவே அதிர்ந்து போன அதிகாரிகள் உடனடியாக கட்டிடம் கட்டி தருவதாக கூறி பள்ளிக் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வர கோரிக்கை விடுக்காமல் அதிகாரிகள் விரைந்து சென்றனர் அந்த பேச்சுவார்த்தை நடத்த வந்த சப் கலெக்டர் அவர்களையும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரை வரச் சொல்லி பொதுமக்கள் அறிவுறுத்தியுள்ளார் எனவே இதுவரை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்காத வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் இரண்டு நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் திங்கட்கிழமை முதல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல்:புது பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டித் தருவதாக கூறிபொதுமக்களை ஏமாற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டம்!!!
7/19/2025
0
திண்டுக்கல்ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள அழகுபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும்அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டித் தர கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி பல்வேறு முறை மனுக்கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியினுள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு வந்த அதிகாரிகள் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துவிட்டு பழைய ஓடுகளை அகற்றி எடுத்துச் சென்று விட்டனர் இந்நிலையில் இன்று வாகனத்தில் தரைக்கொட்டகை அமைக்க ஹாஸ்பிடாஸ் சீட்டுகள் கொண்டுவந்து உள்ளனர் அதைக் கண்ட ஊர் பொதுமக்கள் அதனை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் இதுகுறித்து உடனடியாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் இன்று முதல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்ததை அடுத்து காலை 10.30 மணியை கடந்தும் எந்த அதிகாரியும் பேச்சுவார்த்தைக்கு வராததால் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் அருகே உள்ள அங்கன்வாடிக்கும் குழந்தைகளை அனுப்பாமல் பெற்றோர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்