கோவை:ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ரோட்டரி கோயம்புத்தூர் மெரிடியன் இணைந்து எலும்பு புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்காக ‘ப்ளாசம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தினர்!!!

sen reporter
0


கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மெரிடியன் அமைப்பு இணைந்து, போன் சார்க்கோமா எனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் பயனடையும் வகையில் ‘ப்ளாசம்’ என்ற சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினர். இந்த திட்டம் ஆட்டிடியூட் அறக்கட்டளை மற்றும் கார்டன் ப்ளூ பிராபர்டீஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படுகிறது.இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் இந்த திட்டத்தை, துவக்கி வைத்தார்.

இது குறித்து நிர்வாகிகள் பேசுகையில், இன்று மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலும்பு பகுதியை அகற்றி 'லிம்ப் சால்வேஜ் சர்ஜரி' செய்யப்படுகிறது. பின்னர் அந்த இடத்தில் உலோகம் வைத்து மீண்டும் இயல்பான வாழ்க்கை வாழ வழிவகை செய்யப்படுகிறது. தமிழகத்தின் மேற்கு மண்டல மாவட்டங்களில் முதல் முறையாக 2008ல் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் வெற்றிகரமாக செய்து முடித்தது என்றனர்.இந்த சிகிச்சைக்கான செலவு என்பது சற்று அதிகம் என்பதால் இந்நோயால் பாதிக்கப்படும் ஏழை மக்கள் இந்த சிகிச்சையால் பயனடைய முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். இதற்கு தீர்வு வழங்கும் விதத்தில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மெரிடியன் இணைந்து, 'ப்ளாசம்' திட்டத்தை துவங்கியுள்ளோம். இதில் சிகிச்சை, மருந்துகளுக்கான செலவுகளை நாங்கள் இணைந்து ஏற்போம் என்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top