வேலூர்:ஓரணியில் தமிழ்நாடு மாபெரும் திமுக சார்பில் பொதுக்கூட்டம்!!!
7/03/2025
0
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் வேலூர் மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு மாபெரும் பொதுக்கூட்டம் திமுக வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட செயலாளர், மண்டல தேர்தல் பொறுப்பாளர் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு எழுச்சிமிகு உரையாற்றினார். இதில் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி, மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்எல்ஏ, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு, மாவட்ட பொருளாளர் C.நரசிம்மன், மாவட்ட துணை செயலாளர் G.S.அரசு, மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் M.சுனில்குமார், தொகுதி பொறுப்பாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாநில துணை செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பொதுக்குழுஉறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
