வேலூர்:ஒடுகத்தூரில் புதிய சிமெண்ட் சாலை மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா!!!
8/01/2025
0
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, ஒடுகத்தூர் பேரூராட்சி, அண்ணா நகர் பகுதியில் சுமார் 1 கோடி 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட சாலை மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இவ்விழாவில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதில் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, பேரூராட்சி செயலாளர் பெருமாள் ராஜா, பேரூராட்சி தலைவர் சத்தியாவதி, துணைத் தலைவர் ரேணுகா தேவி மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் என்.பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் ஆர். சி.மணிமாறன், வார்டு கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள், கழக தோழர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.