சூரிய ஆற்றல் திட்டங்களில் 50 மெகாவாட்டுக்கும் மேற்பட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்டதோடு மட்டுமின்றி, இந்தியாவில் முதன் முறையாக தன்னிச்சையாக ஆராய்ச்சி செய்து, லித்தியம்-அயர்ன் பேட்டரி மற்றும் எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம்கள் உருவாக்கும் நிறுவனத்தை தொடங்கி, நடத்தி வருகிறார் வினோத்குமார். இவரது முயற்சியைப் பாராட்டி மத்திய அரசு, இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ், நிதி உதவியை அளித்து வருகிறது.மேலும், பரஸ்பர கடன் உத்தரவாதத் திட்டத்தின்கீழ், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக வினோத்குமாருக்கு, ரூ.9.81 கோடி கடனையும் பாரத ஸ்டேட் வங்கி வழங்கியுள்ளது. இதற்கிடையே, பணப்புழக்க கடனாக ரூ.8 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வளர்ந்து வரும் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்திடும் விதமாக, 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிக்கு வினோத்குமார் அழைக்கப்பட்டுள்ளார்.அன்றைய தினம் மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில்அவரைமாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டசிறந்த தொழில்முனைவோரில் ஒருவராக, குடியரசுத் தலைவர் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கவுள்ளார். இதற்கான அழைப்பிதழை சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் துறை உதவி கண்காணிப்பாளர் கே.பரமேஸ்வரன் முன்னிலையில், அஞ்சல்காரர் ரேவதி, வினோத்குமாரின் நிறுவனத்திற்கு நேரில் சென்று வழங்கினார்.அதனை கையெழுத்திட்டுப் பெற்று கொண்ட வினோத்குமார் கூறுகையில், இந்தியாவில், ‘தயாரிப்போம் திட்டம்’ எங்களை போன்ற இளைஞர்களுக்கு மிகப் பெரிய தொழில் வாய்ப்பினை உருவாக்கியுள்ளது. சூரிய ஆற்றலைக் கொண்டு மின் சக்தியை சேமிக்கும் லித்தியம் பேட்டரிகளை உருவாக்குவதில், சேலத்தை சேர்ந்த 200 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாய்ப்பை, என்னுடைய தொழிலை மேலும் விரிவுபடுத்தவும், நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்கவும் பயன்படுத்துவேன், என தெரிவித்தார்.இந்நிகழ்வின் போது, ஆற்றல் சார் அறிவியல் துறை அரசு ஆலோசகர் பி.அசோக்குமார், பாரத ஸ்டேட் வங்கியின் சேலம் துணை பொது மேலாளர் ஆர்.பாலானந்த், உதவிப் பொது மேலாளர்கள் எஸ்.மணிகண்டன், பி.புஷ்பதந்துடு, மேலாளர் ஸ்ரீவித்யா சின்னதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சேலம்:சுதந்திர தின விழாவில் பங்கேற்க சேலம் இளைஞருக்கு, குடியரசுத் தலைவர் சார்பில் அழைப்பிதழ்!!!
8/05/2025
0
சுதந்திர தின விழாவில் பங்கேற்க சேலம் இளைஞருக்கு, குடியரசுத் தலைவர் சார்பில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சேலத்திற்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கே பெரும் சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.வரும் 15 ஆம் தேதி, 78-வது சுதந்திர தினத்தன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள, சேலத்தை சேர்ந்த இளைஞர் வினோத்குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் அனுப்பிய அந்த அழைப்பிதழை, அஞ்சல்துறை அதிகாரிகள் நேரில் சென்று வழங்கியுள்ளனர்.சேலம் மாவட்டம் நெத்திமேடு பகுதியை சேர்ந்தவர் பி.ஏ.வினோத்குமார் (31). இவர், சூரிய சக்தியால் கிடைக்கும் மின்னாற்றலை லித்தியம் பேட்டரிகளில் சேமிக்கும் தொழில்முனைவோராக உள்ளார். தமிழ்நாடுவேளாண்பல்கலைக்கழகத்தில் ஆற்றல் சார் பொறியியல் துறையில் பட்டம் பெற்ற வினோத்குமார், 2016 ஆம் ஆண்டு தனது தொழில்முறை பயணத்தைத் தொடங்கினார்.