வேலூர்:காட்பாடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!!!
8/18/2025
0
வேலூர்மாவட்டம்,காட்பாடிவள்ளிமலை கூட்டுரோடு பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித் தமிழர் முனைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாள் விழா வெகுவிமரிசையாக 17ம் தேதி கொண்டாடப்பட்டது.இவ்விழாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எழுச்சி பாசறை மாவட்ட துணைச் செயலாளர் அப்பு என்கிறவெங்கடேசன் தலைமையேற்றார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகர மாவட்டச் செயலாளர் வேலூர் பிலிப் கலந்து கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டி பொதுமக்களுக்குஇனிப்புகளை வழங்கினார்.மேலும் முன்னாள் நகர அமைப்பாளர்,1ம் பகுதி செயலாளர் ராஜ்குமார், காட்பாடி முனுசாமி, கல்லூரி பிரேம்குமார், இன்பா, ஆமோஸ், சதீஷ்குமார், ஆண்டோனி, தியோதர், குட்டி சதீஷ், ஷாகுல், ஸ்டீபன்,குல்லா உள்ளிட்ட பல கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று விழாவை கொண்டாடினர்.
