பின்னர், இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் பதிவில், “ஜெர்மனி வாழ் தமிழர்களின் அன்பால் மெய்சிலிர்க்கிறேன். இங்குள்ள தமிழ் உறவுகளை சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி. நமது தமிழ்நாட்டின் பெருமை மற்றும் வலிமையை வெளிப்படுத்தி, புதிய தொழில்களையும், முதலீடுகளையும் ஈர்ப்பதற்காக வந்துள்ளோம். இந்த பயணம் நமது தமிழ்நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க வழிவகுக்க வேண்டும்”எனக்குறிப்பிட்டிருந்தார்.தொடர்ந்து, முதலமைச்சர் இன்று ஜெர்மனியில் முதலீட்டாளர்களை சந்திக்கிறார். இதையடுத்து, பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஜெர்மனி நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதேபோல, முதலீட்டாளர்களிடம் பேசும் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் நிலவும்பொருளாதாரஸ்திரத்தன்மையை விளக்கி, அங்கு முதலீடு செய்யுமாறு அவர்களிடம் அழைப்பு விடுக்கவுள்ளார்.
சென்னை:ஜெர்மனி சென்ற மு.க.ஸ்டாலின் பார்த்ததும் ஆர்ப்பரித்த தமிழர்கள்!!!
8/31/2025
0
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 7 நாள் பயணமாக வெளிநாடு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று ஜெர்மனியில்முக்கியமுதலீட்டாளர்களை சந்திக்கிறார்.அரசு முறைப் பயணமாக ஜெர்மனி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அந்நாட்டில் வசிக்கும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அரசு முறை பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7 நாள் பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். முதலமைச்சருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், செயலர்கள், அமைச்சர் டிஆர்பி ராஜா, பாதுகாப்பு அதிகாரிகளும்உடன்சென்றுள்ளனர். எமிரேட்ஸ் விமானத்தில் நேற்று காலை 9.50 மணிக்கு ஜெர்மனி புறப்பட்ட முதலமைச்சர் இரவு 9 மணியளவில், ஜெர்மனியின் டியோட்ஸ்லாந்த் நகரை சென்றடைந்தார். அங்கு அவருக்கு ஜெர்மனிவாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களிடம் மகிழ்ச்சியாக உரையாற்றிய ஸ்டாலின், தனித்தனியே நலம் விசாரித்தார். பின்னர், அங்கு வந்திருந்த குழந்தைகளை ஏந்தி உச்சி முகர்ந்தார்.
